ஹஜ் குறித்து, சவூதி - ஈரான் பேச்சுவார்த்தை
எதிர்வரும் ஹஜ் யாத்திரை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய தூதுக்குழு ஒன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. தூதரக தாக்குதலுக்குப் பின்னர் இரு நாட்டு உறவுகளும் கடந்த ஜனவரியில் முறிந்த நிலையில் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக இது அமையவுள்ளது.
கடந்த செப்டெம்பரில் நூற்றுக்கணக்கானோர் நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிகமான ஈரானியர் பலியான நிலையில் இரு நாட்டு உறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சவூதி நிர்வாகம் அழைப்பு விடுத்ததற்கு அமைய பிரதிநிதிகள் வரும் ஏப்ரலில் ரியாதுக்கு செல்வார்கள் என்று ஈரான் ஹஜ் ஏற்பாட்டுக் குழு தலைவர் சயீத் ஒஹதி குறிப்பிட்டுள்ளார். இந்த தூதுக் குழுவினர் விசா கிடைக்கும் வரை பார்த்திருப்பதாக குறிப்பிட்ட ஒஹதி, இவர்கள் சவூதி ஹஜ் அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
சவூதி முன்னணி ஷியா மதத் தலைவர் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து ஈரானின் சவூதி தூதரகம் மீது தாக்கதல் நடத்தப்பட்ட நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

Post a Comment