Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, புதிய இடத்தில் காணி


-விடிவெள்ளி ARA.Fareel-

நான்கு வருட கால­மாக பெரும் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு மாற்­றீ­டாக தம்­புள்­ளையில் அடுத்த மாதம் புதிய காணி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்ளை நக­ரத்­துக்கு அண்­மையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்­கான காணி­யொன்­றினை இனங் கண்­டுள்­ள­தா­கவும், எதிர்­வரும் மே மாதத்தில் இதற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்­தி­யா­கு­மெ­னவும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

தம்­புள்­ளையில் பள்­ளி­வா­சலை தற்­போது அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து வேறி­டத்­துக்கு அகற்றிக் கொள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் இணங்­கி­யுள்­ள­தா­கவும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே புதிய பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மா­ணித்துக் கொள்­வதற்கு நக­ருக்கு அண்­மையில் வச­தி­யான இடத்தில் காணி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த மாதம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்­னாண்­டோவின் தலை­மையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் தலை­வ­ரு­மான ரஞ்சித் அலு­வி­கார, தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டனர்.

கலந்­து­ரை­யா­டலின் போது ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் வாழும் 19 குடும்­பங்­க­ளுக்­கு­மான காணியும் புதிய பள்­ளி­வாசல் காணிக்கு அருகில் வழங்­கப்­பட வேண்­டு­மென பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலை­வ­ரிடம் கோரிக்கை விடுத்­தது.

அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­மென நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் தெரி­வித்தார்.

‘தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு காணி வழங்­கு­வ­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை முன்­வந்­துள்­ளதால் தற்­போது இருக்கும் இடத்­தி­லி­ருந்து தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்றிக் கொள்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் தெரி­வித்தார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ நேரத்தில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தி­களால் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யது. தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை அதி­பதி இனா­ம­லுவே ஆனந்த சுமங்­கல தேரரின் தலை­மை­யி­லான குழு­வி­னரே தாக்­கு­தல்­களை நடத்­தினர்.

பள்­ளி­வாசல் மிம்பர் மற்றும் குர்ஆன் பிர­திகள் சேத­மாக்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் பல மட்­டங்­களில் பேசப்­பட்­டன.  தீர்வு பெற்றுக் கொள்­வ­தற்­காக முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் மறுத்து வந்­தது. இதேவேளை இனாமலுவே ஆனந்த சுமங்கல தேரர் பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திலிருந்தே அகற்றப்பட வேண்டுமென சவால் விட்டு வந்தார்.

இந்நிலையிலேயே தற்போது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகமும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தீர்வுக்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.