யாழ் மாநகர ஆணையாளருக்கு எதிராக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
யாழ் மாநகர ஆணையாளருக்கு எதிராக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இன்று (9) காலை கடைகளை பூட்டிய சுமார் 26 இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தங்களது தொழிலுக்கு இடையூறு பொலிஸாரினால் விதிக்கப்படுவதாகவும்.உடனடியாக மாநகர ஆணையாளர் தலையீட்டு தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தற்போது 150 க்கு அதிகமான இறைச்சிக்கடை பணியாளர்கள் குழுமி நின்று எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர்.
இன்றைய தினம் அனுமதி பத்திரமில்லாது கொல்களம் நோக்கி கொண்டு சென்ற ஆடு பொலிஸாரினால் உரிமையாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Post a Comment