முஸ்லிம்களும் தமிழ்பேசுவோர் என்ற அடிப்படையில், ஒன்றுபட்ட கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்
அதிகாரப்பகிர்வின் மூலம் எமது தமிழ் பேசும் மக்கள் தங்களது உரிமைகளை முழுமையாக பெறவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட கோரிக்கையினை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணைத் திறப்பு விழா, இன்றைய தினம் (09) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நாடாளுமன்றம், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழு நிர்ணயிக்கப்பட்டு, அதனுடைய முதல் அமர்வு இடம்பெற்று, இம்மாதம் 28ம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது.
அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள், கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம். பிரேமதாஸ காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மஹிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாண சபை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். அரசியல் சாசன குழு என்பது, பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நிலையில், மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்துக்குக் கொடுக்க இருக்கிறார்கள்' எனக் கூறினார்.
இன்றைய சூழலில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரிக்கப்படாத ஒற்றுமையான இலங்கை நாட்டுக்குள் முழுமையான விசுவாசமான இறைமையின் அடிப்படையில் அழிக்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வின் ஊடாக, விசேடமாக வடக்குக் கிழக்கில் வாழுக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிறப்புரிமை உறுதி செய்யப்பட்டு, சமமாக, சமத்துவமான, சமாதானமாக வாழக்கூடிய அடிப்படையை எமது மக்கள் அங்கிகரித்திருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியான, நிலை நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனை முன்வைத்துத்தான் நாமும் பயணத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தத் தீர்வு, விரைவில் ஏற்பட வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு, விசேடமாக, தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக நிற்கவேண்டியது அவசியம்.
எங்களுடைய பலம் ஒற்றுமையில் தான் தங்கியிருக்கிறது. அதே விதமாக முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது நீங்களும் ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். உங்களுடைய பலமும் அதில் தான் இருக்கிறது. இரண்டுக்கும் மேலாக, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும்.
அந்த அதிகாரப் பகிர்வின் பெறுமதியை நாங்கள் முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என குறிப்பிட்டார். '
செல்வநாயகம், டட்லியுடன் செய்த ஒப்பந்தமும். பண்டா - செல்வா ஒப்பதந்தத்தினையும் தமிழ் மக்களுக்காக மட்டும் செய்யவில்லை, தமிழ்பேசும் மக்களுக்காகச் செய்தார்.
1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் ஜெயவர்த்தனாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழ் பேசும் மக்கள் என்றுதான் செய்தார்கள். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்றுதான் செய்தார். அஷ்ரப்பின் காலத்தில் இந்த விடயங்கள் சம்பந்தமாக அவர்களுடன் பேசியிருக்கிறோம். நாங்கள் சில ஒப்பந்தங்களுக்கு வந்திருக்கிறோம். நீண்ட பேச்சுக்களுக்குப் பின்னர், சந்திரிகாவினால் 2000 களில் முன்வைக்கப்பட் பிரேரணைகளில் அஸ்ரப் உயிருடன் இருந்த காலத்தில் பேசப்பட்ட விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.
அந்த விடயத்தினைப் பொறுத்தவரையில், பல கருமங்களில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுடைய உடன்பாடுகள் இப்போதும் பிரதிபலிக்கின்றதாக இருந்திருக்கின்றன. ஆகவே நீதியில், உண்மையில் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியடத்தில், தமிழ், முஸ்லிம்கள் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள்.
ஆகவே, ஒருமித்த ஒற்றுமையினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எங்களது கடமை எதிர்வரும் காலத்தில் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் முன்னேறுகின்றதாக இருக்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வரவேண்டும். ஜனாதிபதி இந்தக் கருமத்தில் உறுதியாக இருக்கிறார். பிரதமரும் அரசாங்கமும், இந்தக் கருமத்தை நிறைவேற்றுதல் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம் .
ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாங்கள், எவருக்கும் அநீதி நடைபெறுவதை அனுமதிக்காமல் செயற்பட வேண்டும். அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களால் தெரிவுசெய்யப்படாத மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் பல்வேறு சவால்களை தெரிவித்து வருகின்றனர்.
எதனையும் செய்யவிடமாட்டோம் என்று கூறி வருகின்றனர்.சாத்வீக போராட்டம், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தகள், ஆயுத போராட்டம், சர்வதேச தலையீடு போன்ற ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சவால் விடுவதும் பேசுவதும் பொருத்தமான விடயமாக நான் கருதவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கழுத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கூறுகின்றனர். தேர்தலில் கூட மகிந்தவை ஆதரித்தவர்கள். தங்களது அரசியல் இலாபத்திற்காக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என இங்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இந்த மாகாணங்கள் தொடர்ந்து வாழ வேண்டிய மக்கள். நாங்கள் பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். எனவே எமது ஒற்றுமையினை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

Hon.Sampanthan, pls make unity among your MPs, PCM and Northern Provincial Council and Tamil Peravai about the power sharing to Muslim community. Because they are in different concept about Muslim community
ReplyDeleteAs a muslim. .I strongly believe what we having is more than enough.only we need more dialogues with majority sinhales to eradicate extremist in majority.
ReplyDeleteWithout power how these tamil raciat treating muslims currently north and east.then image what kind of situation will arise if these busterds got power.
தமிழர்கள் வேறு; காத்தான்குடி, ஏறாவூரில் அறுக்கப்பட்ட முஸ்லிம்கள் வேறு.
ReplyDeleteDear Sampanthan Ayya , in Great Britain , outsiders
ReplyDeletebecome British citizens but they are not English .
English are the native , whites ! Not all British
subjects are English even though they speak English .
If you apply this theory to your Tamil speaking
Muslims , you are doing a great favour to both
communities . No big issue for Muslims to digest your
desire but why this insistence since the time of
Ramanathan ? It is a big business for you to deal
with . The black people living for centuries in the
western world are not expected to feel natives of
their adopted soil simply because they found a new
language or new land . Their colour makes them feel
and be called Afro - American , French or German.
The case of Muslims speaking Tamil and Sinhala
in our country would be the same . Of course that
doesn't mean Muslims can afford to stay out of Tamil
language issues whenever taken up for discussions.
No one like to join communities. Because there are some separatists in tamil politicians and muslim politicians also. All of the peoples have to understand, what to do. There is no leader in our muslim community. So every politician thinking he is the king of the community. So how can to talk about peace.
ReplyDeleteTamils also killed by muslims ( in akkaraipattu 1985, kalmunai, veeramunai ). But we are telling always about kattankudy and eravur. So dont tell about past. We everyone have to forget the past. In future we all sould be one community as tamil speaking community.
ReplyDeleteமக்கள் நலம் அற்ற பேடி அரசியல்வியதிகளே , ஜாதி , மத அரசியல் , செய்கின்றனர்,முதலில் மனிதன் ,கடவுள் பின்பு தான் மதம்,அதன் பின்புதான் மத வழக்கம் , மத புத்தகம் எல்லாம்.
ReplyDeleteIn inslam we all are came from one father and mother...so why tamil speaking. ..we can live with sinhalese people better than these tamil speaking.so one srilanka one country.
Delete