Header Ads



பேக்கரி உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் இந்த காலப்பகுதியில் பேக்கரி உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பேக்கரி தொழிலில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளமையே இதற்குக் காரணமாகும் என அந்த சங்கத்தின் தலைவர் என்கே. ஜயவர்தன கூறினார்.

நாட்டிலுள்ள 50 வீதமான பேக்கரிகளில் ஊழியர்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பாண் உள்ளிட்ட முக்கிய பேக்கரி உற்பத்திகளில் தட்டுப்பாடு நிலவுகின்றது.

விடுமுறையில் சென்றுள்ள பேக்கரி ஊழியர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிக்குள் பணிக்குத் திரும்பிய பின்னரே பேக்கரி உற்பத்திகளை நுகர்வோர் வழமைபோன்று பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.