Header Ads



இஸ்ரேலை உலகிலிருந்து நீக்க, ஈரான் அணுவாயுதம் தயாரிக்க வேண்டுமென்றவர் பணி நீக்கம்


’ஜேர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் தான் உலகிலேயே சிறந்த மனிதர்’ என கருத்து தெரிவித்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் கவுன்சிலர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள Luton என்ற நகருக்கு Aysegul Gurbuz என்ற பெண் கவுன்சிலராக பதவி வகித்து வந்துள்ளார்.

எதிர்க்கட்சியான லிபரல் கட்சியை சேர்ந்த இவர் நேற்று -10- அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை செய்தபோது, கவுன்சிலரின் டுவிட்டர் பக்கத்தில் ‘இந்த உலகிலேயே சிறந்த மனிதர் ஹிட்லர் தான் என்றும், இஸ்ரேல் நாட்டை உலக வரைப்படத்திலிருந்து நீக்குவதற்கு ஈரான் நாடு அணு ஆயுதத்தை தயாரிக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டதே இந்த பணியிடை நீக்கத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால், இவர் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் தான் கவுன்சிலராக பதவி ஏற்றார்.

ஆனால், கவுன்சிலர் பதவி ஏற்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே இந்த கருத்தினை டுவிட்டரில் வெளியிட்டதற்காக தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கவுன்சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கட்சி தலைமையிடம் முறையாக விளக்கம் அளிக்கப்படும் என கவுன்சிலரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

யூதர்களுக்கு எதிரான கருத்துக்களை கண்டிக்கும் வகையில் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரான ஜெர்மி கொர்பைன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார்கள் எழுந்ததால், அதனை எதிர்க்கொள்ளவே இந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 comments:

  1. Do not worry sister, it will be deleted automatically.

    ReplyDelete
  2. Don't forget Zionist Jews and Shias are brothers..they never fight..both are armies of dajjal..

    ReplyDelete

Powered by Blogger.