இலங்கையில் 9,800 ரூபாயில் தலைமுடி வெட்டும் கடை
உலகில் முதற்தர சிகையலங்கார நிலையமாக கின்னஸ் புத்தகத்தினால் சாதனைப் படைத்த தர்யுஃபெட் என்ட் ஹில் நிலையத்தின் கிளை ஒன்று இலங்கையில் திறக்கப்படவுள்ளது.
1805ஆம் ஆண்டு வில்லியம் பிரான்சிஸ் என்பவரால் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிலையத்திற்கு உலகின் பல நாடுகளிளும் கிளைகள் காணப்படுகின்றன.
பெங்களூர், டொரன்டோ, பீஜிங், பெங்கொக், சிங்கப்பூர், நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே இந்த சிகையலங்கார நிலையத்தின் கிளைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிலையத்தில் சிகை வெட்டுவதற்காக இலங்கை ரூபாய் பெறுமதியில் 9,800 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் ஆடம்பரமாக சிகை திறுத்துவதற்கான கேள்வி இலங்கையில் அதிகம் நிலவுவதால் குறித்த சிகையலங்கார நிலையத்தை இங்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் அறிந்த வரையில் Lou Ching Wong என்னும் சிகை அலங்கார நிபுணர் 20 வருடங்களுக்கு முன்னமே நான்கு இலக்கங்களில் தன் சேவைக்கான கட்டணத்தை அரவிட்டார். :)
ReplyDelete