Header Ads



90 மில்லியன் ரூபா செலவில், தெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்


தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் நாள்- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

மத்துகமவில் உள்ள பட்டமுல்ல கந்த அனைத்துலக பௌத்த நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தர் சிலை, 135 அடி உயரமானது.

சுமார் 90 மில்லியன் ரூபா செலவில், மத்துகம தொகுதி ஐதேக அமைப்பாளர், ஜெகத் பின்னகொடவிதானவினால் இந்தப் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரவில் உள்ள பழைமை வாய்ந்த அவுகண புத்தர் சிலையைப் போன்று இந்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மாதுளுவாவே சோபித தேரரின் சிலையையும் மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.

3 comments:

  1. Intha BUDDHAR silai nattayum makkalaum kaappaattuma...?
    Intha Katkalal seiyyappatta silaigalukku enna power irukku..? Ean innum intha paditta muttalgal sinthikka marukkuraargal.....???

    ReplyDelete
  2. Wasting the money for nothing. When will these polytheists understand?

    ReplyDelete

Powered by Blogger.