Header Ads



முன்னாள் பிரதமர் ஹில்டன் ஹோட்டலுக்கு, செலுத்தவேண்டிய 40 லட்சம் ரூபா

முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்னவின் பதவிக்காலத்தில் அவரது இல்லத்தில் ஏழுபேருக்கு வழங்கப்பட்ட ஒருநேர உணவுக்கு இருபத்தியொரு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்ன பிரதமராக பதவி வகித்த காலத்தில் ப்ளவர் வீதியில் உள்ள விசும்பாயவை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவரது அலுவலக மற்றும் இல்லத்தில் நடைபெறும் விருந்து வைபவங்களுக்கான உணவு, பானம் என்பவற்றை வழங்கும் பொறுப்பு ஹில்டன் ஹோட்டலுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவரது பதவிக்காலத்தின் கடைசி ஐந்து மாதங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களுக்கான உணவு, பான வகைகளுக்கு மட்டும் 40 லட்சம் ரூபா வரையான பாக்கித் தொகையை நிலுவையில் இருப்பதாக ஹில்டன் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் ஏழு இலங்கையருக்கு அவர் அளித்துள்ள ஒரு நேர உணவிற்காக மட்டும் உயர்தர உணவு வகைகளை இருபத்தியொரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாவுக்கு தருவித்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் இன்னொரு நாள் தேநீர் விருந்துக்காக மூன்றரை லட்சம் ரூபாவும், பிறிதொரு நாளில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு விருந்தளிப்பதற்காக 17 லட்சம் ரூபாவுக்கு உணவு, பான வகைகள் தருவித்துக் கொண்டிருப்பதாகவும் ஹில்டன் ஹோட்டல் அறிவித்துள்ளது.

எனினும் இது குறித்த பாக்கித் தொகையை செலுத்துமாறு பிரதமர் அலுவலகத்திடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், ஆட்சி மாற்றத்தின் காரணமாக தங்களுக்குரிய நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்றும் ஹில்டன் நிர்வாகம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. தொகைக்குப் பகரமாக குறித்த ஹோட்டலில் ஐயா பீங்கான் கழுவலாம். அல்லது துணி துவைக்கலாம். இதெல்லாம் தூக்கிப் பிடித்து பேச வேண்டிய விடயமல்ல.

    ReplyDelete
  2. அவருதான் ஜனாதிபதியின் ஆலோசகராச்சே?? ஜனாதிபதியிடம் சொன்னால் சுதந்திர கட்சியை காப்பாற்றுவதற்கான செலவு கணக்கில் அதை கட்டி விட மாட்டாரா என்ன??

    ReplyDelete
  3. ஹில்டன் நிர்வாகத்தினருக்கு ஒரு கேள்வி!
    7 பேருக்கு ஒரு நேர உணவுக்கான கட்டணம் 21 இலட்சம்...என்ன உலகமடா இது...யாருடைய பணம் இது....ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவன் கூட ஒரு இறாத்தல் பாண் வாங்கும் போது வரியாக கொடுத்த பணம் இது.
    அப்படி 3 இலட்சம் ரூபாவுக்கு தனி ஒருவருக்கு என்ன உணவு கொடுத்தீர்கள் என தெரிவிக்க வேண்டும்.

    அரசாங்கம் இதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. சாப்பிடும் ஒரு தட்டில் தங்கத்தினால் நிறைத்தாலும் மிஞ்சும் இவருக்கு ஏற்கெனவே காது கேட்காது அதனால் என்னட திண்டாய் என்று செவிட்டுல பளார் என்று அறைந்தால் காது துறக்கும் உண்மை வெளிவரும் திருட்டு பயல்கள் நாட்டே சாப்பிட்டு முடித்து விட்டானுகள்

    ReplyDelete

Powered by Blogger.