Header Ads



3 அமைச்சர்கள் தொடர்பில், SLFP ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஆளும் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துடைய மூன்று அமைச்சர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

பல தடவைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் இந்த அமைச்சர்கள் விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணக்கப்பாட்டுடைய கூட்டு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதுவருடத்தின் பின்னர் இந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.