Header Ads



அல்லாஹ்வின் ஆற்றலை உணர்ந்த, சிங்கள சகோதரர் (உண்மைச் சம்பவம்)


-Mohamed Nizous-

சில நிமிடங்கள் ஒதுக்கி வாசியுங்கள். உங்கள் ஈமான் அதிகரிக்கலாம்.

சன நெருக்கம் மிகுந்த பஸ். புட் போர்ட்டில் நின்ற அந்த ஹாஜியாருக்கு உள்ளே நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பொக்கட்டில் ஒரு பிக் பொக்கட் கையை விடுவது தெரிந்தது.

சைக்கினையால் அந்தப் பயணியை எச்சரித்தார் ஹாஜியார்.

ஒருவாறு உள்ளே சென்று ஹாஜியார் கிடைத்த சீற்றில் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பிக் பொக்கட் திடீரென்று இறங்கி ஓடினான்

ஹாஜியார் அமைதியாக இருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன.

ஹாஜியாரின் பக்கத்து சீற்றும் காலியாக அந்தப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பயணி உட்கார முயற்சித்த போதுதான் அவருடைய போண் திருடப் பட்டதை உணர்ந்து பலமாக சத்தமிட்டார்.

'நான் உங்களை எச்சரிக்கை செய்தேனே". சிங்களத்தில் ஹாஜியார் கேட்டார்.
"பணம் இருந்த பையை பாதுகாத்ததில் போணை கவனிக்க மறந்திட்டன்" பதட்டத்துடன் பதில் வந்தது.

ஹாஜியாரின் கைபேசியை வாங்கி களவு போன போணுக்கு கோல் எடுத்தார். றிங் போனது.

பதிலில்லை.

ஹாஜியார் அவரை ஆறுதல்படுத்தினார். "நான் ஒரு வசனத்தைக் கூறுகிறேன். அதை நம்பிக்கையோடு சொல்லுங்கள்.

இன்ஷா அல்லாஹ் போண் கிடைக்கலாம்" ஹாஜியார் மெதுவாகக் கூறினார். 

ஏதோ ஒரு நம்பிக்கையில் கூறுங்கள் என்றார் பயணி

انا لله وانا اليه راجعون؛ اللهم اجرني في مصيبتي واخلفلي خيرا منها

"Inna lillahi wa Inna Ilaihi Raji’un. Allahumma ajurni fi musibati wakhluf li khayran minha

அந்த சிங்கள சகோதரர் கஷ்டப்பட்டு சொல்லி முடித்தார்.

ஹாஜியார் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக் கொண்டார்.

அன்று மாலை நேரம். ஹாஜியாருடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு. "ஹாஜியார் எனக்கு போண் கிடைத்து விட்டது."

"அல்ஹம்துலில்லாஹ். எப்படி"

"ஆச்சரியம் ஹாஜியார். நான் மனைவிக்கு கோல் பண்ணி போண் காணாமல் போனதை சொல்லிவிட்டு எனது வேலையை கவனிக்கச் சென்று விட்டேன். பின்னேரம் வீடு திரும்பியதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காணாமல் போன போண் மனைவியின் கையில் இருந்தது. எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்டேன். 'நீங்க கோல் பண்ணி கொஞ்ச நேரத்தில ஒருத்தன் கதவைத் தட்டினான். நோனா புது போண் ஒன்று நல்ல மலிவா இருக்கு தரவா என்றான். எனக்குள் மூளைக்குள் எங்கோ இடித்தது. வாங்கிப் பார்த்தேன். உங்களுடைய போண்தான். கள்ளன் கள்ளன் என்று கத்தத் தொடங்க போணை விட்டு விட்டு ஓடி விட்டான்' என்று மனைவி சொன்னா ஹாஜியார்."அந்த சிங்கள சகோதரர் போணில் கூறி முடித்தார்.

கதை கப்ஸா என்று கொமண்ட்ஸ் எழுதத் தயாராகும் சகோதரர்களுக்கு-

குறித்த சம்பவத்தில்  வரும் ஹாஜியார் பள்ளி மிம்பருக்கு அருகில் நின்று மேற்படி சம்பவத்தைக் கூறியதை Mohamed Nizous என்ற பெயரை கொண்ட நான் நேரடியாகக் கேட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முழு நிகழ்ச்சியிலுமே என்னை ஆச்சர்யப் பட வைத்தது இதுதான். ஆயிரக் கணக்கான வீடுகள் இருக்கையில் சரியாக எப்படி குறித்த திருடன் அதே வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான். 

சிலருக்கு இது கப்ஸாவாக அல்லது சாதாரண சம்பவமாகத் தெரியலாம்.ஆனால் என்னைப் பொறுத்த வரை இதுவும் ஒரு இறை அற்புதமே..!

33 comments:

  1. நிச்சயமாக அல்லாஹ் மிகப் பெரியவன்

    ReplyDelete
  2. One of the beautiful names of Allah SWT is Al Muid - Restorer.

    ReplyDelete
  3. இந்த வசனத்தை சொன்னால், களவு போன பொருள் திரும்ப வரும் என்று இஸ்லாத்தில் எங்கே சொல்லி இருக்கின்றது? முதலில் அதற்கான ஆதாரத்தை முன்வையுங்கள். மிம்பரிலேயே பொய் சொல்கின்ற காலத்தில், மிம்பருக்குப் பக்கத்தில் ஹாஜியார் பொய் சொன்னாரா, இல்லை இதனை எழுதியவர் பொய் சொன்னாரா என்று தெரியவில்லை.

    இஸ்லாத்தையே ஏற்காதவனுக்கு, அரபியில் எதோ முனுமுனுக்க இந்த மார்க்கம் என்ன மந்திர மாயாஜால மார்க்கமா?
    நாளை எனது பொருள் ஏதாவது காணாமல் போனால், இதனை ஓதினால் கிடைக்குமா?

    மலேசியன் எயர்லைன்ஸ் இற்கு இதனை சொல்லிக் கொடுங்கள், காணாமல் போன MH360 விமானம் ஏர்போர்ட்டில் வந்து நிற்கின்றதா என்று பார்ப்போமே?

    ReplyDelete
  4. ஆம்,இது சத்தியமான விடயமே இது போண்ற பல விடயங்களை நாங்களும் கண்டுள்ளோம்

    ReplyDelete
  5. News Onrume Kidaikaliya????????????????

    ReplyDelete
  6. Allah arinthawan allaahu Akbar

    ReplyDelete
  7. Al-Hamthulila (Should be Translate in Sinhala...!)

    ReplyDelete
  8. all praise to be alone allah

    ReplyDelete
  9. உண்மையாக இருக்கும் ஆனால் இது போன்ற ஹப்சாக்கள் வருவது இயல்புகள் போன்கிடைத்தது ஆச்சரியம் இல்லை இது பொய்யாக இருந்தால்தான் ஹாஜியாரும் கட்டுரையாளரும் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார்கள் .நிம்பருக்கு பக்கத்தில் நின்று சத்தியம் செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய வழியாக இல்லை ஏற்றுக் கொள்வோம்

    ReplyDelete
  10. அண்மையில் நாடு முழுதும் இஸ்திஸ்கா தொழுகை நிறைவேற்றியதும் மழை பெய்யத் தொடங்கியதே........ அல்லாஹ் மிகப் பெரியவன். கேப்பவருக்குக் கொடுக்கின்றான். அவனை மறந்தவர்களை அவனும் மறந்து விடுகின்றான்.

    ReplyDelete
  11. ஒரு பொருள் தொலைந்துவிட்டாலோ, அல்லது நமது விருப்பத்துக்குரியவர்கள் மரணித்துவிட்டாலோ, இந்த துஆவை ஓதுவதென்பது நபிகளாரின் சுன்னாவில் உள்ளதுதான்,
    இந்த சம்பவம்கூட சில வேளை நடந்திருக்கலாம்,
    ஆனால் அந்த துஆவை அந்த மாற்றுமத சகோதரர் ஓதியதனால்தான் தொலைந்த பொருள் திரும்பக்கிடைத்தது என்ற முடிவுக்கு வருவது தவறாகும்,
    மாற்று மதத்தவர்களுக்கு முதலில் கலிமாவைக் கற்றுக்கொடுக்கத்தான் இஸ்லாம் கூறுகிறதே தவிர துஆவை அல்ல.....

    ReplyDelete
  12. @Ameer Umar....May be u dont know the value of this word...
    "Innalillahi wainna ilaihi rajiyoon" if you say this with your pure YEKEEN..then sure you will receive ur lost one"
    So, do not try to foolish the word and Allah's (almighty's) supper power...
    However, this story may be correct or not correct...but this Word & Allah's Supper power is true..So....do not act like everything you known....
    Just say "Allahu A'lam" Allah knows everything....

    ReplyDelete
  13. அமீர் அவர்களே : இவர் களவு போன பொருள் கிடைப்பதற்கு இந்த துஆ வை ஓத சொல்லவில்லை. மாராஹ இறைவனின் கிருபையும் ஆற்றலையுமே ந்ஞபஹா படுத்துகிறார். தலைப்பை வாசிக்கவும். நம்பிக்கையே ஈமான். நாம் எல்லாம் வல்ல அற ரஹ்மானை நம்புகின்றோம். இது போல் கோடி அதிசயங்களை அவனே செய்கிறான். ஊதாரணமாக பூமிக்கு வரும் அதிகமான எரிகற்கள் சாம்பலாகவே பூமியை அடைகின்றன. உங்களை போன்றோருக்கு லாஜிக் தேவை. மூசா அலை அவர்களின் தடி பெரிய பாம்பாக மாறியதில் எதுவும் லாஜிக் இல்லை...மாரஹ அர்ரஹ்மானின் கிருபையும் அருளுமே உள்ளன. இந்த கதையை நீங்கள் நம்பினால் இறைவனை புகழ்ந்து அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள். இல்லையேல் விட்டு விடுங்கள். இது உண்மையாகுமிடத்து நீங்கள் பாவக்கரரகலாம். அதேபோல் இது உண்மையாகுமிடத்து எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சிங்கள சகோதரரிட்கு ஹிதாயத் கொடுக்க போதுமானவன்.

    ReplyDelete
  14. நழீம் என்ன சொல்றிங்கள் கடந்த காலங்களில் இவ்வாறான கட்டுக்களை விட்டுதான் இப்போது உண்மையான நிலை தெரிய வந்து பிரச்சினை உருவாகி இருக்கிறது அகீதாவுக்குள் நில்லுங்கள் கசப்பாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும்

    ReplyDelete
  15. ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் தஆலா இறக்கிவைத்த இறுதி வேதம் தெளிவானதாகவும், சிறந்த மக்கள் முன்மாதிரி காட்டி, வாழ்ந்து சென்றதாகவும் இருக்கின்றது. இந்த மார்க்கத்தில் இப்படியான கப்ஸாக்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ்வின் ஆற்றலுக்கு குர்ஆனில், ஹதீஸில் போதிய அளவு படிப்பினைகள் இருக்கின்றது. மிம்பருக்கு பக்கத்தில் ஹாஜியார் (? - இஸ்லாத்தில் இல்லை) சொன்னதால் அது உண்மை ஆகிவிடாது.

    இப்படியான விடயங்களை, அல்லாஹ்வின் மார்க்கம் முன்மாதிரி காட்டாத விடயங்களை சொல்லும் பொழுது, மலேசிய விமானத்தை கொண்டு வா, பிரகீத் எக்னளிகொடவை கொண்டுவா, உபாலி விஜயவர்தனவை கொண்டுவா என்று அடுத்த மனிதன் கேட்கத்தான் செய்வான். மார்க்கத்தில் முன்மாதிரி காட்டப்படாத விடயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. ALLAHU a'alam ....
    But interesting to hear. ..

    ReplyDelete
  17. இந்த சம்பவம் உண்மையாக இருக்கலாம். இதன் மூலம் அந்த சிங்கள சகோதரன் ஈமான் கொண்டிருந்தாலும்,,,, சில முஸ்லிம் சகோதர்களின் நம்பிக்கை இல்லாத கருத்துக்களால் இருந்த இடமே மேல் என்று ஓடிவிட்டாலும் ஆச்சரிய பட ஒன்றுமில்லை.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அமல்கலின் சிறப்பில் கொப்பியடித்ததா.?ங

    ReplyDelete
    Replies
    1. @ Hilmy Lol . நான் அதை கேட்டு 15 வருடமாகிற்று. A/L செய்யும் போது ஒரு பள்ளியில் இஷாவுக்கு பிறகு ஒருவர் புத்தகத்தை எடுத்து கூர ஆரம்பித்த சொல் அது.

      Delete
  20. Do not worry Mr Ameer Umad does not Allah SWT 's power. There are many incidents similar to this has happened. So our people can not believe. That is the strength of their eiman.

    ReplyDelete
  21. MR. AMEER UMAID,

    UNGALUKKU NAMBIKKAI ILLAMA IRUKKALAM BUT ALLAH NADATHTHAATA KOODIYAWAN ENBATHE MARANTHU VIDATHINGA. NAMBIKKAI ULLATHIL IRUKKAWENUM APPA ITHEWIDA ATPUTHEM ONGADA WALKAILA WARUM. NANRI

    ReplyDelete
    Replies
    1. @ Rashid Fahir! நம்பிகையிருப்பதால் தான் நாம் அனைவரும் முஸ்லிமாக இருக்கிறோம். அதறகாக கேட்கும் கட்டுகதைகளெல்லாம் நம்பவேண்டிய அவசியமில்லை. ஏன் இது கட்டுக்கதை என்பதை கொஞ்சம் மூலையைப்பாவித்தாலே விளங்கும். அல்லது நான் இட்ட மற்ற பின்னூட்டத்தை விரும்பினால் பாருங்கள்.
      நன்றி.

      Delete
  22. Faith could move even the mountains , depending on the strength of EEman which is concerned about unseen . little wonder the phone was recovered . History is replete with many a wonders of this nature . Dua n Thikr have magnificent amazing powers .

    ReplyDelete
  23. Anwar Ali salafi. Allarum suvarkkam pohathu oru koottammattum than pohum athu nambiya koottammattum

    ReplyDelete
  24. கட்டுரையாளரே!! அல்லாஹ்வின் ஆற்றலைப்பற்றி இங்கு யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. அவன் சக்தியைப் பற்றி உணரவேண்டுமானால் அவன் படைப்பினங்களைப்பற்றி ஆராயச்சொல்லி அவனே கூறுகிறான்.
    சரி விஷயத்துக்கு வருகின்றன.
    1. உங்கள் தலைப்பில் ஏதோ நீங்கள் பாரத்தவிடயம் மாதிரி உண்மைசம்பவம் என்று கூரியுள்ளீர்கள்.
    2. பிட்பாக்கட் காரன் திருடி விட்டு ஒடும் தருணத்தில் பாதிக்கப்பட்டவர் அந்த ஹாஜியார் பக்கத்தில் உட்கார முயற்ல்கிறார் என்றால் அவர் அந்த பிட்பாக்கட் இறங்கிய இடத்தை விட தொலைவில் உள்ளவர் என்று தெரியவருவருகிறது.
    3. திருடிய எவனும் Door to Door marketing (வீடு வீடாக சென்று வியாபாரம் ) செய்யமாட்டான்.
    4. திருடியவன் அவன் area வில் விற்பானே தவிர வேறொரு ஊருக்கு சென்று விட்கவேண்டிய அவசியமில்லை. திருடனும் பாதிக்கப்பட்டவரும் ஒரே ஊர்வாசியாக இருப்தற்கும் சாத்தியமில்லை. அவ்வாறு இருந்தாலும் அவன் வீதியில் வரும் ஒருக்கோ அல்லது அந்த ஊரில் உள்ள Phone Shop இற்கு தான் எடுத்துச்
    சென்றிருப்பான்.
    5. mobile phone என்பது இலகுவில் விற்ககூடிய ஒரு பொருள், அவன் வீடு வீடாக சென்று விட்கவேண்டிய தேவையே அவனுக்கு ஏற்பட்டிருக்காது.

    தமிழிழ் ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன்.
    பொய் சொன்னாலும் பொருந்தச்சொல் ( நாம் பொய்யே சொல்லக்கூடாது என்று அல்லாஹ் திட்டவட்டமாக கூரியுள்ளான்)
    இதில் கட்டுரையாளர் பொய் சொன்னாரா , ஹாஜியார் பொய் சொன்னாரா என்று தெரியாது. ஆனால் common sense உள்ள எவறுக்கும் அந்த கதையை பள்ளியில் கேட்கும் போதே தெரிந்திருக்கும் அப்படி நடக்க வாய்ப்பில்லை அந்த கதை பொய்யென்று!!!!!

    ReplyDelete
  25. அல்லது இன்னும்கொஞ்சம் சுவாரசியமாக , இலங்கையில் நடக்க வாய்பபுல்ல வகையில் சிந்தித்தால்.
    அவர் வேலைக்கு போகும்போது தான் அவர் phone உ பறிகொடுத்துள்ளார். பின் மனைவியிடம் நடந்ததை phone இல் ( office phone என நினைக்கிறேன். ) கூரியுள்ளார்.
    ஆனால் மனைவி phone கிடைத்த இந்த ஆச்சரியமான சம்பவத்தை கணவர் வீடு வரும்வரை அவரிடம் சொல்லாத்தன் காரணம் என்ன???
    ஒரு வேலை கணவனின் போனை திருடியவன் களவனா அல்லது மண்மதனா? போன் திருடியது அந்த வீட்டுக்கு இவன் போக இருவரும் ( மனைவி+ திருடன்/மன்மதன்) போட்ட திட்டமா?

    ReplyDelete
  26. voice srilanka. i always like your comments.
    mad people...who believes thahlim book.(author-periyaar,created by innumoru periyaar).

    ReplyDelete

Powered by Blogger.