Header Ads



"யாழ்ப்பாண முஸ்லிம்களின், மீள்குடியேற்றத்தை மேம்படுத்த உதவுங்கள்"


நேற்று 10.03.2016 யாழ் { வேலணை பிரதேச செயலாளர் திருமதி. எஸ். மஞ்சுளாதேவியுடன் வேலணை பிரதேச செயலகத்தில் மண்கும்பான், நயினாதீவு முஸ்லிம் மக்களின் காணி, வீடு, தற்காலிக குடியிருப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பாக முன்னால் யாழ் மாநகரசபை உறுப்பினரும், மக்கள் பணிமனைத் தலைவரும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தினின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான பிரதிநிதியுமான, மௌலவி பி. ஏ. எஸ் சுப்யான் கலந்துரையாடினார். நயினாதீவில் உள்ள முஸ்லிம் மக்கள் இடப்பெயர்விற்கு உள்ளாக விட்டாலும், அவர்களின் தொழில்பாடு மிகவும் கஷ்டமாகவே இருந்து வருகின்றது. அங்கு இருபத்தியெட்டு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற பொழுதிலும் அவர்கள் கூடுதலானோர் வறுமைக் கோட்டின் கீழேயே இருந்து  வருகின்றனர். அவர்களில் ஐந்து குடும்பங்களுக்கு காணியுமில்லை, வீடுமில்லை. எனவே இவர்களைக் கவனத்தில் எடுத்து அவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யவேண்டும். நயினாதீவில் அரச காணிகள் இல்லாததினால் இக்குடும்பங்ளுக்கு காணிகள் பெற்றுத்தரும் போது வீட்டுத்திட்டங்களுக்கு ஏதேனும் வழியில் உதவமுடியும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

        மண்கும்பானில் காணியுள்ள இதுவரையில் வீட்டுத்திட்டத்தை பெறாத குடும்பங்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் தற்போதய திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்று கொடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் 9.3.2016ல் பேசப்பட்ட போது அவர் இணக்கம் தெரிவித்த விடமுயம் பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டி போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

        மேலும் காணியில்லாதவர்களுக்கு மண்கும்பான் பள்ளிவாசலுக்குரிய மேலதிகக் காணியில் திட்டமிட்ட அடிப்படையில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நாற்பது குடும்பத்தைக் குடியமர்;த்த முடியுமென்றும் இங்கு குடியேற விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்கள் தவிர இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் தனக்கு விண்ணப்பிக்கும் படியும், அவ்வாறாயின் இதற்க்கான அனுமதியை முஸ்லிம் பண்பாட்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில்  தான் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் கூறினார்.

        வேலணைப் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட  அரசகாணிகள் குடியேற்றத்திற்கு பொருத்தமற்றது என்றும் காணிகள் தொடர்பான வரைபடம் தம்மிடமில்லை என்றும், அரச காணி தொடர்பாக தகவல் இருந்தால் தம்மிடம் தரும்படியும் தான் அதனை பரிசீலிப்பதாகவும் கூறினார்.

         வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான், சாட்டி, அல்லைப்பிட்டி,  போன்ற பகுதிகள் வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் இன்றும் சில காணிகள் முஸ்லிம்களின் பெயர்களைக் கொண்டு இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பூரணமான ஆதாரத்திற்குரிய தகவல்களுடன் தொடர்பு கொண்டால் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை மேம்படுத்த உதவும் எனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.