Header Ads



"பொன்சேக்காவுக்கு Mp பதவி" மைத்திரியும், ரணிலும் கவலைதரும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளனர் - HRW

இலங்கை அரசாங்கம் யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள படையினருக்கு தலைமைதாங்கிய முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவை  நாடாளுமன்றத்திற்கு நியமித்துள்ளமை யுத்த குற்றச்சாட்டுகள் குறித்துவிசாரணைகளை மேற்கொள்ளும் அதன் வாக்குறுதிகளிற்கு முரணாண  நடவடிக்கை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் பொன்சேகாவின் நியமனத்தின் மூலம்,  பரந்துபட்ட துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏனயை இராணுவ அதிகாரிகளையும் தான் பாதுகாக்கும் என்ற  சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தான் பொறுப்புக்கூறல் குறித்து தீவிரமாக உள்ளதையும், கண்துடைப்பு நடவடிக்கைளில் ஈடுபடப்போவதில்லை என்பதையும் தனது மக்களிற்கும் சர்வதேசமூகத்திற்கும் அர்த்தபூர்வமான முறையில் வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகுற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படும் என்ற இந்த அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிய மக்களின் நம்பிக்கையை மீறும் செயல் பொன்சேகாவின் நியமனம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களிற்கும் நீதி கிடைப்பது குறித்து உறுதியாக உள்ள தலைவர்கள் என தங்களை முன்னிறுத்த வேண்டிய தருணத்தில் ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவலை தரும் சமிக்ஞைகளை  வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவதளபதிக்கு பாராளுமன்றத்தில் ஆசனத்தையும், இராணுவத்தில் உயர் அந்தஸ்த்தையும் வழங்கியதன் மூலம் அரசாங்கம் இதுவரை தான் சம்பாதித்த நற்பெயரிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இந்த மனித உரிமை பேசும் இவர்கள் எல்லாம் பாலஸ்தீன் மக்கள் அழிவதை கண்டுகொள்ளாதது ஏன்?மனித உரிமை எங்கு போய்விட்டது

    ReplyDelete
  2. பொன்சேகாவை விடவும், அன்றைய பாதுகாப்பு செயலாளரே பொறுப்புக் கூற வேண்டியவர். போரின் வெற்றி தன்னையே சாரும் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் கோத்தபாய.

    ReplyDelete
  3. மகிந்தர் ஆட்சியதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றுவதற்கு தேசியவாதி முகமூடியை அணிந்து சிங்கள மக்களை ஏமாற்றப்பார்க்கின்ற நிலையில் அதன் தாக்கத்தை ஓரளவு ஐதாக்குவதற்காகத்தான் மற்றொரு இறுதி யுத்த வெற்றி வீரராக பெரும்பாலான சிங்கள மக்களால் கருதப்படும் சரத் பொன்சேகாவை ஆளும்தரப்பினர் இராஜதந்திர உபாயத்துடன் உள்வாங்கியிருக்கின்றனரே தவிர மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காரணத்திற்காக அல்ல என்பது அரசியல் கற்றுக்கட்டிக்குக் கூட இலகுவாகப் புரியும்

    ReplyDelete

Powered by Blogger.