Header Ads



ஆணையொன்றின் மூலம், யானை வழங்கியது தொடர்பில் CID விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணையொன்றின் மூலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு 4 யானைக்குட்டிகளை வழங்கியது தொடர்பாக குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.சட்டமா அதிபர் சார்பில் நேற்று (10) நீதிமன்றத்தில் ஆஜராகிய சிரேஸ்ட வழக்குரைஞர் திலீபா பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆணை மூலம் வழங்கப்பட்ட யானைகுட்டிகள் குறித்த விசாரணையை மேற்கொள்ளவேண்டியுள்ளது, குறிப்பாக இந்த யானைக்குட்டிகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது,

முன்னாள் ஜனாதிபதியின் ஆணையை தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த நெவில் வன்னியாராச்சி என்ற அதிகாரி மூலம் யானைகள் வழங்கப்பட்டுள்ளன,இவற்றில் சில யானைகள் காணமற்போயுள்ளனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. சில யானைகள் ரணிலிடம் போய்ச் சிக்கியிருக்கலாம், கவலைப்பட ஏதுமில்லை!

    ReplyDelete
  2. அப்போ இப்பதான் ஒரு முடிவு கட்ட முடிவு எடுத்து இருக்கிரார்கள்போல இனி பொதுமக்கள் மௌனமாக இருந்தால் சரி

    ReplyDelete

Powered by Blogger.