Header Ads



"முஸ்லிம் கட்சிகளின், மாபெரும் தவறு"

-விடிவெள்ளி-

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் இலங்கை வெளிவி­வ­கார அமைச்­சினால் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்த நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே சந்­திப்­பு­களை மேற்­கொண்­ட­தா­கவும் குறித்த நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களைச் சந்­திப்­ப­தற்­கான நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் ஐ.நா. அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஹுசைன் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளையோ அல்­லது வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தி­க­ளையோ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சந்­திக்­க­வில்லை எனும் குற்­றச்­சாட்டு தொடர்பில் ஆராய்ந்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய ­வ­ரு­வ­தா­வது,  ஹுசைன் இலங்­கைக்கு வருகை தரு­வ­தற்கு ஒரு மாத காலத்திற்கு முன்­னரே அவ­ரது நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கப்­பட்டு பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது.

இக் காலப்­ப­கு­தியில் அவர் வடக்கு கிழக்கு முத­ல­மைச்­சர்­க­ளையும் கொழும்பில் ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோரை மாத்­தி­ரமே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிகழ்ச்சி நிரல் அனைத்தும் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்­சி­னா­லேயே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இதில் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களைச் சந்­திப்­ப­தற்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனினும் ஹுசைன் வருகை தரு­வ­தற்கு 10 நாட்­க­ளுக்கு முன்­னரே முஸ்லிம் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து அவரைச் சந்­திப்­ப­தற்­கான கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் ஏலவே அவ­ரது நிகழ்ச்சி நிரல் பூர்த்தி செய்­யப்­பட்­டு­விட்­டதால் புதி­தாக நேரம் ஒதுக்க முடி­யாது என கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தினால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பினும் ஹுசைன் கிழக்­குக்கு விஜயம் செய்த சமயம் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அக­மதைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இதன்­போது கிழக்கு மாகா­ணத்தின் பொது­வான விவ­கா­ரங்கள் குறித்தே பேசப்­பட்­டன. 

இச் சந்­திப்பின் பிற்­பாடு திரு­கோ­ண­ம­லையில் சிவில் சமூக பிர­தி­நி­தி­களை ஹுசைன் சந்­தித்தார். இதில் பங்­கேற்ற நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் முஸ்லிம் சமூகம் சார்­பான கோரிக்­கை­களை அவ­ரிடம் முன்­வைத்­தனர்.

அதே­போன்று வடக்­குக்கு விஜயம் செய்த சமயம் வட மாகாண முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்பு இடம்­பெற்ற சமயம் வடக்கு முஸ்­லிம்கள் சார்­பாக மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதே­போன்று கொழும்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த சமயம் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் ஆணையாளர் ஹுசைனுடன் சில நிமிடங்கள் உரையாடியுள்ளார். 

எனினும் முஸ்லிம் கட்சிகள் ஒரு மாத காலத்திற்கு முன்னரே வெளிவிவகார அமைச்சின் ஊடாக ஹுசைனை சந்திப்பதற்கான  முயற்சிகளை மேற்கொண்டிருப்பின் அம் முயற்சி வெற்றியளித்திருக்க வடும் என்றும் ஐ.நா. அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1 comment:

  1. Bro. Subaideen, ஹுசைனால் பிரயோசனமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் இங்குள்ள முஸ்லிம் கட்சிகள் சரியாக இயங்குகிறார்களா? என்பதை தான் இங்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. பட்டம், பணம் பதவிகளுக்கு காட்டும் ஆர்வம் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் உரிமைகளையும் தீர்த்துக் கொள்வதற்கும் பெற்று கொள்வதற்கும் அர்பணிப்புடனும் தியாகத்துடனும் சேவை செய்கிறார்களா? என்பது கவனிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் கண்டிக்கப்படவும் வேண்டும், தண்டிக்கப்படவும் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.