Header Ads



முஸ்லிம் தலைமைகளை, ஒரு போதும் நம்பமுடியாது - சுபைர்

-அப்துல் ஹமீட்-

இன்று எமது நாட்டில் பேசப்படுகின்ற புதிய அரசியலமைப்பு தீர்வுத்திட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினுடைய அபிலாசைகளும் உள்வாங்கப்பட வேண்டும் அந்த விடயத்தினை கையாளுகின்ற பொறுப்பினை முஸ்லிம் தலைமைகளை நம்பி ஒரு போதும் கையளித்து விட முடியாது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கட்டார் தேசிய விளையாட்டு தினத்தினையொட்டி அங்கு பணிபுரியும் கட்டார் வாழ் ஏறாவூர் நலன்பரி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கவந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எமது முஸ்லீம் சமூகத்தினது இருப்பினை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டியதொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த வியடம் தொடர்பாக கையாள முஸ்லீம் அரசியல் தலைமைகளை மாத்திரம் விட்டு விட முடியாது காரணம் கடந்த காலங்களில் அவர்கள் பணங்களையும் அமைச்சுப்பதவிகளையும் பெறுவதற்காகவும் சொற்ப இலாபங்களுக்காகவும் பல தவறுகள் மேற்கொண்டதனை மறந்துவிடமுடியாது.

இந்த நல்லாட்சியரசை  நிறுவக் காரணம் சிறுபான்மை மக்களே. இந்த ஜனாதிபதியை முஸ்லிம் தமிழ் மக்களாகிய நாங்கள் தான் நிறுவினோம். ஆனால் இந்த அரசில் அமைச்சை அலங்கரிக்கும் எமது முஸ்லிம் தலைமைகள் எதனை நமக்காக பெற்று தந்துள்ளார்கள் ?

எமது முஸ்லிம் தலைமைகளின் சாதனை என்ன? ஒன்றுமில்லை… மக்கள் தூக்கத்தை கலைத்து கேள்வி கேட்காமல் இருந்தால் இவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். எமது பிரதேசத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேலதிகமான யுத்தப்பாதிப்பு குடும்பங்களுக்காக அமைச்சர் ரிசாத்திடம் நான் பலமுறை போராடியிருக்கிறேன். இஹ்லாசுடனான  எனது அரசியல் பயணத்தில் யார் பிழை விட்டாலும் சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன். அத்துடன்  நான் அரசியலில் சோம்பரியாக  இருக்க மாட்டேன் .

அரசியலமைப்பின் சீர்திருத்த பிரச்சினை தற்போது ஓங்கி ஒலித்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் யார் தேசிய தலைமை என சண்டைபிடிக்கும் எமது தலைமைகள் செய்வது என்ன? தமிழ் மக்கள் இந்த விடயத்தில் உசாராக இருக்கிறார்கள். இது போன்றே தேர்தல் மறுசீரமைப்பு பிரச்சினையும் இருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் மேலும் அவர்கள் தவறிழைக்கக் கூடும் எனவே புதிய அரசியலமைப்பு தீர்வு திட்டத்தில் எமது அபிலாசைகளையும் உள்ளடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவே எமது சமூகத்தினுடைய கல்விமான்கள் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய ஒரு உயர் சபை உருவாக்கப்பட்டு அதனூடாக கவனம் செலுத்தப்படல் வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார

1 comment:

  1. யதார்த்தமான உண்மை உரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நாம் பதிவு செய்துள்ளோம். அன்ஸிர் ( JM நிருபர்) அவர்கள் கருத்தில் கொள்ளுவார் என நினைக்கிறோம். இக்கருத்தை துணிந்து கூறிய சுபைர் அவர்களுக்கும் இதை JM பிரசுரித்த அப்துல் ஹமீட் அவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.