Header Ads



மீண்டும் ஆட்சி கிடைக்குமென்ற, ஜோதிடத்தை நம்பி கடலில் குளித்த மகிந்த (படங்கள்)


ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வௌவந்து கொண்டிருக்கின்றன.

இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக தலைகீழாய் தவமிருப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், சோதிட சாஸ்திரப்படி தனக்கு தோஷம் ஏற்பட்டிருப்பதன் காரணமாகவே அதிகாரம் தன் கையை விட்டுப் பறிபோயுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்கின்றார்.

இதன் காரணமாக சோதிட ரீதியான பரிகாரங்களும், தோஷ நிவர்த்திகளிலும் கடுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் அவரது கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும் முயற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக சோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி அண்மையில் தங்காலை கடற்கரையில் மல்லாக்க மிதந்தபடி குளித்து தோசம் நிவர்த்திக்க முயன்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வேகமாகப் பரவி மஹிந்தவின் அதிகார மோகம் குறித்து கேலி செய்ய வழிசெய்துள்ளது.


5 comments:

  1. பள்ளிகளில் நான்தான் சாகும் வரை நிருவாகியாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் நம்மவர்களும் இதில் படிப்பினை பெற வேண்டும் பதவி மோகத்தின் வேகம் எங்கல்லாம் கொண்டுபோய் சேர்க்கிறது.அல்லாஹ் நாடியவர்களுக்கு பதவிகளை கொடுக்கிறான் தான் நாடியவர்களிடம் இருந்து பதவிகளை பறிக்கிறான் இதுவும் அல்லாஹ்வின் அத்தாச்சிகளில் ஒன்றுதான்.அடம்பிடிக்கும் பதவி மோகம் கொண்டவர்களே பயந்துகொல்லுங்கள்

    ReplyDelete
  2. "சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்"
    என்று ஒரு பழமொழி உண்டு. இன்னும் எப்படியெல்லாம் அப்பச்சியை ஆட்டி வைக்கப் போகிறானோ? அந்ந பஞ்சாங்கக்காரன்.

    ReplyDelete
  3. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

    அவருக்கு சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளது என்பதற்காக அவர் கொட்டாவி விட்டால்கூட அதையும் சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவீர்களா..?

    அவர் பாரிய தவறுகள் செய்தவர் என்று கூறப்படுவது உண்மையே. அதற்கு குற்றங்களை நிரூபித்து உரிய காலத்தில் தண்டனை வழங்குவதை விடுத்து அவரது தனிப்பட்ட சிறு அசைவுகளையும் இப்படி கொச்சைப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல என்று தோன்றுகின்றது.

    ReplyDelete
  4. மண்குதிரையை நம்பி எவனாவது ஆற்றில் இறங்குவானா? ஜோதிடத்தால் இழந்ததை ஜோதிடத்தால் மீளப்பெற முடியுமா? மாங்கா மண்டயனே? புத்தனின் போதனைகள் போதவில்லையா உன் புத்தியைத் தீட்ட?

    ReplyDelete
  5. அன்மையில் மண்கொண்டு நிரப்பப்பட்ட நீச்சல் தடாகத்தினை சோதனையிட்டபோது பூஜை முட்டிகலும் பாதணியும் கண்டெடுத்தார்கள் அதனால் அடிக்கடி மந்திராலோசனைகள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கு என்பதை மறுக்கவும் முடியாதே...

    ReplyDelete

Powered by Blogger.