Header Ads



கர்ப்பிணி மனைவியுடன் விமானத்தில் சென்றவருக்கு, பிரித்தானிய அதிகாரிகள் செய்த அவமானம்


கர்ப்பிணி மனைவியுடன் தேனிலவு சென்ற இஸ்லாமிய நபரை தீவிரவாதி என்று கருதி அந்நபரை விமானத்தில் இருந்து பிரித்தானிய மான்செஸ்டர் பொலிஸ் அதிகாரிகள் இறக்கிவிட்டுள்ளனர்.

சொத்து மேம்பாட்டாளராக(Property Developer) பணியாற்றும் அலி(39) என்பவர் தனது வியாபார நோக்கம் கருதி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இவர் தனது கர்ப்பிணி மனைவி சாராவுடன் மொரோக்கோவின் மராக்கேஷ் நகருக்கு தேனிலவு செல்வதற்காக, பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமானநிலையத்திற்கு சென்று விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளார்.

விமானத்தில் ஏறிய சிலமணி நேரங்களில் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இவர், தனக்கு நேர்ந்தவை பற்றி பேஸ்புக் மற்றும் யூடியுபில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

எனக்கு இது தாமதமான தேனிலவாகும், நானும் எனது மனைவியும் விமானத்தில் ஏறியவுடன், நான் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன், எனது மனைவி அருகில் இருப்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, எனது அருகில் வந்த விமான ஊழியர், நீங்கள் விமானத்தை விட்டு கீழிறங்குங்கள் என்றார், நான் எதற்காக என்று மூன்று முறை கேட்ட பின்னர், பொலிசார் உங்களுக்காக வெளியில் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று சொன்னார்.

அதன் பின்னர், என்னை அழைத்துச்சென்ற மான்செஸ்டர் பொலிசார், தீவிரவாத இயக்கத்தின் பின்னணியின் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

அதற்கு ஒத்துழைத்து அவர்களிடம் சென்ற என்னிடம், அவர்கள் பல கேள்விகள் கேட்டனர், ஆனால் எந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லவில்லை.

எனக்கு தெரியும் எதற்காக அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று, நான் ஒரு இஸ்லாமியர், அதனையும் தாண்டி நான் வைத்திருந்த தாடி, என்னை தீவிரவாத பின்னணியாக சித்தரித்துவிட்டது.

ஒரு மொடலாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் தாடி வைத்தேன், அதனை தவறாக பார்த்தது குற்றமாகும், நான் கடந்த இரண்டு வருடங்களில் 20 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளேன், ஆனால் இந்தமுறை தான் என்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தற்போது, அந்த விமான நிறுவனம் மற்றும் மான்செஸ்டர் பொலிசார் மீது புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 389,000 பேர் பார்த்துள்ளனர்.

2 comments:

  1. He kept bead for model.not fot funnah?intension wrong everything will be wrong

    ReplyDelete
  2. இதுபோன்ற விடயங்கள் கண்டிக்கத்தக்கது!

    யாரோ சிலர் எங்கோ புரிந்துகொண்டிருக்கும் முட்டாள்தனமான தவறுகளுக்காக வேறு யாரோ பலர் உலகெங்கும் தவணைமுறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றார்கள், பாவம்!

    ReplyDelete

Powered by Blogger.