Header Ads



கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் BCAS CAMPUS கைகோர்ப்பு

பாதுகாப்பு தொடர்பான கற்கை நெறிகளுக்கான இலங்கையின் விசேட பல்கலைக்கழகமான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (Kotelawala Defense University-  KDU) இணைந்து செயலாற்றுவதற்கான விஷேட ஒப்பந்தமொன்றினை BCAS CAMPUS செய்து கொண்டுள்ளது. கடந்த 09.02.2016 அன்று கொத்தலாவல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அப்பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் M P பீரிஸ் அவர்களும், BCAS Campus  நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் இதில் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் KDU சார்பாக அதன் உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்களும், மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் MHJ ஆரிய ரட்ண அவர்களும், உயிரியல் இரசாயன பரிவின் தலைவர் CL குணசேகர அவர்களும், மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. பிரசாட் பிரேமரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, BCAS CAMPUS சார்பாக ஆதன் உயர் பீடாதிபதி பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்)அவர்களும், அதன் பொது முகாமையாளர் கௌசர் முஸ்தபா அவர்களும், BCAS Campus இன் உயிரியல் விஞ்ஞான பீட துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுரங்கி பெர்னாண்டோ அவர்களும் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகரும் வெளிவிவகாரங்களுக்கான முகாமையாளருமான முஹம்மட் ரியாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

 இலங்கையின் தனியார் உயர்கல்வித்துறையில் 16 வருட நம்பகத்தினையும் சிறப்பனுபவத்தினையும் கொண்ட முன்னணி உயர்கல்வி நிறுவனமான BCAS Campus , அடிப்படை பாடநெறிகள்( Degree Foundations) தொடக்கம்  HND, Top-Up Degrees  மற்றும் முதுமானி ( Masters) தரங்களிலான பல்வேறு பாட நெறிகளையும் தொழிற்பயிற்சிகளையும் இலங்கையில் வழங்குகிறது. சர்வதேச தரமும் அங்கீகாரமும் கொண்ட பிரித்தானியாவின் உயர்கல்வி நிறுவனங்களான Wolverhampton பல்கலைக்கழகத்துடனும் London South Bank பல்கலைக்கழகத்துடனும், Edexel UK உடனும் கொண்டுள்ள உறுதியான கல்விசார் இணைப்பின் மூலமாக இலங்கையில் வழங்கப்பட்டுவரும் இந்த உயர்கல்வி கற்கை நெறிகள் மூலம் குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்புகளையும் இலங்கை மாணவர்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

 அந்த வகையில் இலங்கையிலும் வெளி நாட்டிலும் உருவாகி வரும் நவீன தொழில் சந்தைக்கேற்ற  துறைகளான Civil Engineering, Construction, Computing, Business Mgt, Quantity Surveying ,Law , Telecom Engineering மற்றும் Bio Medical Sciences ஆகிய துறைகளிலான உயர்கல்வி வாய்ப்புக்களை BCAS Campus வழங்குகின்றது. 

கொழும்பு, கல்கிஸ்ஸை ஆகிய இடங்களில் தனது பிரதான வளாகங்களையும் கண்டி , மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் பிராந்திய வளாகங்களையும் கொண்டிருக்கும் BCAS Campus கட்டார் நாட்டிலும் கிளை நிறுவனமொன்றினைக் கொண்டியங்குகின்றது.  இந்த பரந்த வலையமைப்பின் காரணமாக, BCAS Campus வழங்கும் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பாட நெறிகளை இலங்கையின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வது சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. 

BCASவழங்கும் பிரதான பாட நெறிகளில் ஒன்றான உயிரியல் விஞ்ஞானத்துறை (Bio Medical Sciences) பாடநெறியில் கற்கும் தனது மாணவர்களுக்கு விஷேட பயிற்சிகளையும் ஆய்வுக்கான வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் முகமாகவே கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் BCAS Campus தற்பொழுது கை கோர்த்துள்ளது. கைச்சாத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தத்தின் பலனாக, கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் பணியாற்றும் சிரேஷ்ட  விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் விஷேட ஆய்வு கூட வசதிகளைக்கொண்டு BCASயினது மாணவர்கள் பயிற்றுவிக்கப் படவுள்ளனர். அதேபோன்று இந்த ஒப்பந்தத்தின் மூலமாக BCAS Campus இல் கடமையாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகளின் கல்விசார் உதவிகளையும் ஆலோசனைகளையும் கொத்தலாவல பல்கலைக்கழகம் பெற்றுக்கொள்ளவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 உயிரியல் விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட வசதிகளை  BCAS Campus தன்னகத்தே கொண்டிருப்தோடு இலங்கையின் தலை சிறந்த ஆய்வு கூட நிறுவனத்திலும் அதே போல முன்னணி தனியார் வைத்திய சாலையான DURDANS வைத்திய சாலை ஆய்வு கூடங்களிலும் தனது மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 BCAS Campus வழங்கும் பெறுமதியான உயர்கல்வி வாய்ப்புகள் மூலமாக கடந்த 16 வருடங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் முதுமானிப் பட்டங்களையும் இளமானி பட்டத் தகைமைகளையும் அதே போல தொழில் தகைமைகளையும் பெற்று உயர்வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்படத்தக்கதாகும்




1 comment:

Powered by Blogger.