Header Ads



ஞானசாரருக்கு எதிராக 50 க்கும் மேற்பட்ட வழக்குகள்

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நாட்டின் பல்­வேறு நீதி­மன்­றங்­க­ளிலும் சுமார் 50க்கும் மேற்­பட்ட வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ் வழக்­கு­க­ளி­லி­ருந்து அவர் விடு­தலை பெறு­வ­தற்கு பல ஆண்­டுகள் செல்லும் என்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார்.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக ஹோமா­கம நீதி­மன்றில் 3 வழக்­கு­களும் கோட்டே நீதி­மன்றில் 3 வழக்­கு­களும் கொழும்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் 2 வழக்­கு­களும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஒரு வழக்கும் என ஒன்­பது வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், அளுத்­கம சம்­ப­வங்கள் தொடர்பில் மாத்­திரம் களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் 44 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

ஹோமா­கம நீதி­மன்றில் சந்­தியா எக்­னெலி­கொ­டவை அச்­சு­றுத்­திய வழக்கில் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஞான­சார தேரர் ஏனைய வழக்­குகள் தொடர்பில் எதிர்­கா­லத்­திலும் விளக்­க­ம­றி­ய­லுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறித்த சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

9 comments:

  1. It is fine. How many cases against Thaw Sena? Some time back it was 47 according to Thaw sources. But I am not sure about the number

    ReplyDelete
  2. சகோதரர் நிசார்:கலிமா சொன்ன ஒரு முஸ்லிமை கீழ்தரமான இனவாதக்குலுவோடு ஒப்பிடுவதென்பது அனாகரீகமற்றது.நீங்கள் எந்த இயக்கத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்கும்போது ஊடகங்களில் நாகரீகத்தைப் பேண முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் உங்களின் கரத்தில் இருக்கும் கீ போர்டு குரங்கிற்கு கிடைத்த பூமாலையாகிவிடும்.
    இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இன்று இஸ்லாத்தினையும் முஸ்லிம்களையும் நோக்கி அன்னிய இனவாதிகளினால் எறியப்படும் தப்பான எறிகணைகளோடு போரடக்கூடியவர்கள்.முடிந்தவரை அவர்களிடத்தில் இஸ்லாத்தினை சொல்லி தப்பான எண்ணங்களை போக்கி இனங்களிடையே ஒற்றுமையை ஏட்படுத்தத் துடிப்பவர்கள்.அதற்காக எம்மதமும் சம்மதம் என்ற பாணியில் ஏனைய இயனக்க்கங்களைப் போன்று செயட்படமுடியாது.இறைவனின் திருபொருத்தத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயட்படும்போது கல்லடிகள் பொள்ளடிகள் வந்து விழுவதென்பது சகஜமே.
    அதுவும் நிசார் உங்களைப்போன்ற கலிமா சொன்ன சாதாரண முஸ்லிம்களிடமிருந்து தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி விரலை நீட்டுவது SLTJ யின் உயரிய தஹ்வாப் பணியை பாதிக்காது.ஏனென்றால் இனவாதிகள் கூட எத்தனையோ தடவைகள் பலவந்தமாக நிகழ்ச்சிகளுக்குள் புகுந்து உயிர் அச்சுறுத்தல் விட்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வின் நாட்டமின்றி இனவாதிகளினால் துரும்பைக் கூட அசைக்க முடியாது.
    சகோதரர் நிசார். இஸ்லாத்தினை பிறருக்கு உங்களால் எத்திவைக்க முடியாவிட்டாலும் பிறரை கீழ்த்தரமாக விமர்சிப்பதனை நிறுத்துங்கள்.இஸ்லாத்தின்பால் பிறர் தப்பெண்ணம் கொள்ளாதபடி வால்ந்தாலே போதும் அது தானாய் வளர வழிவகுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Kamaruddeen, 40 mela cases irukka endru thaane keytten. Adu pilayaaka irundaal marukka Wendum. Theevirawaadikal eppoadum kurangu Kaluda endru thaan pesuwaarkal. 40 mela cases irukkirwarkal poomiyillula siranda wartheykalaal thangalay adayaalapadaththuwaday niruththik kollawendum. SENA enbadu nakareekamaana waartheythaan. Anniya makkalay patri Thawkaarar poththikittu irunda poadum

      Delete
    2. தன் வினை தன்னை சுடும் ! நாங்க மட்டும் தான் அல்லாஹ்வின் புறத்தில் சுவர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட நபர்களை போன்று, பிற இயக்கத்தினை கபுறு வணங்கி என்றும் காபீர்கள் என்றும் பத்வா கொடுத்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமைக்காக இன்று வரை தடையாக உள்ள ஒரு அமைபிற்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது மட்டும் எந்த வகையில் நியாயம். இஸ்லாத்தின் பால் பிறர் தப்பெண்ணம் கொள்ளாத படி நடந்துகொள்ளுமாறு கூறும் நீங்க இயக்க வெறி சுய விளம்பரதிற்க்காக ஒற்றுமையாக இருந்த ஊர்களை துண்டாடிய இந்த அமைப்பை ஆதரிதுகொண்டு இந்த வசனத்தை கூற கொஞ்சமாவது தகுதியுடையவரா? ஏதாவது ஒரு பிரச்சினையில் பிரபலமாகி முஸ்லிம்களின் தலைமைதுவத்தை அடைய வேண்டும் என்ற நோக்கோடு சமுதாய சேவையில் களம் இறங்கும் இந்த ஜாஹிளியாக்கள் முதலில் தன் முஸ்லிம் சகோதரனோடு எப்படி மரியாதையாக பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ளட்டும்

      Delete
  3. வேகமும தேவை விவேகமும தேவை எனற உணமையை கொஞசம நினைவுபடுததிககொனடால ஆரோககியமாக இருககும...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தஃவா என்பது வெறுமனே குர்ஆன், ஹதீஸைக் கொண்டு செய்யப்படுவதல்ல!

    அதற்கு பொறுமை, ஆழ்ந்த புலமை, தெளிந்த ஞானம், வளர்ந்த முதிர்ச்சி, நிதானம், நடுநிலை, வார்த்தைகளைக் கையாளும் திறன், புண்படுத்தாப் பண்பு, கண்ணியம் காக்கும் குணம், உணர்வுகள்
    சீண்டப்படாமல், இனங்கள் தூண்டிவிடப்படாமல், குணங்கள் சேதப்படுத்தப்படாமல் கருத்தேற்றும் ஆளுமை, எரிச்சல்படுத்தாத தோற்றம், உண்மை, நேர்மை, பொறுமை, வன்மை, வாய்மை, வாக்குத் தவறாமை, நோக்கு பிழையாமை, முகபாவம், போன்ற அனைத்து நற்குணங்களும் கொண்டவராக, தகுதியானவராக இருக்க வேண்டும்.

    நபிகளாரை அல்லாஹ் குர்ஆனை வெளிப்படுத்த தேர்ந்தவரைப் பற்றிக் கூறும் போது " நீர் உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறீர்" என்று கூறுவதிலிருந்து அறியலாம்!

    பாலர் பாடசாலையில் படிப்பிப்போர்கூட தகுதிகள் கொண்டோராகவே இருக்கின்றனர். தஃவா பணி மிக உயர்ந்தது. சமுதாயங்களின் அழிவோடு தொடர்பானது என்பது மிகுந்த அபாயத்தினை விளக்குவது.

    அத்துமீறல்களும், சுத்துமாத்துகளும், சித்து விளையாட்டுக்களும், வெத்து வேட்டுக்களும், குத்திக் குதறல்களும் நீர்த்துப் போக வைத்துவிடும் தஃவாவை!

    ReplyDelete
  7. anna kotuma ithu an entha wiwatham ?

    ReplyDelete

Powered by Blogger.