வங்கதேசத்தில், அரசியல் கட்சித் தலைவரை கொன்ற வழக்கில், 11 பேருக்கு, மரண தண்டனை
வங்க தேசத்தில், அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை கொன்ற வழக்கில், 11 பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வங்க தேசத்தில், அவாமி ஜுபா லீக் கபாசியா என்ற கட்சியின் முன்னாள் தலைவர், ஜலாலுதீன் சர்க்கார். 2003 ஆகஸ்ட், 17ல், தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த, தாகா நகர கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாசில் எலாகி புயிய்யான், குற்றம் சாட்டப்பட்ட, 11 பேருக்கும், மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் மட்டுமே, நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்; மற்ற ஐந்து பேர், இன்னும் தலைமறைவாக உள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வங்க தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின், தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள்.
Post a Comment