Header Ads



UNP அரசாங்கம் பதவி விலகவேண்டும் - விதுர விக்ரமநாயக்க

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனின் அரசு பதவி விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அரசமைக்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

ஹொரனை பகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசு தனது இயலாமையை மறைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கத்தை நடாத்த முடியவில்லை எனின் கூட்டமைப்புக்கு அரசமைக்க இடமளித்து விலகிச்செல்ல வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்

No comments

Powered by Blogger.