முஸ்லிம்கள் பற்றிய, சோபித தேரரின் கவலை..!
அரசியல் சமூக செயற்பாட்டாளரான சோபித தேரர் முஸ்லிம்கள் குறித்து கொண்டிருந்த கவலையை இந்தவேளையில் பகிர்ந்துகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையம் விரும்புகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்பிவைப்பதிலும், நல்லாட்சியை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றிய சோபித தேரர், இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் கவலைகளை கொண்டிருந்தார். தம்மை சந்திக்கும் முஸ்லிம் பிரமுகர்களிடம் அவர் இதை எடுத்துக்கூறவும் பின்நிற்கவில்லை.
ஆம், அந்தக் கவலைதான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் அதாவது தேசிய பிரச்சினைகள் வரும்போது ஒதுங்கி நிற்கிறார்கள் என்ற கவலையாகும்.
உதாரணமாக ஒரு சம்பவம்
இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது சம்பளம் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து முன்னெடுத்த போராட்டத்தின் போதே சோபித்த தேரரிடமிருந்து இந்தக்க கவலை வெளிப்பட்டுள்ளது.
(முஸ்லிம் சமூகத்திலும் பல விரிவுரையாளர்கள் உள்ளனர். குறித்த போராட்டத்தில் எத்தனை முஸ்லிம் விரிவுரையாளர்கள் பங்குபற்றினர் என்பது கேள்வியான விவகாரம். விரிவுரையாளர்களின் சம்பள போராட்டம் வெற்றியளித்தபோது, முஸ்லிம் விரிவுரையாளர்களுக்கும்தான் சம்பள அதிகரிப்பு கிடைக்கிறது.
முஸ்லிம் கவுன்சில் பிரமுகர் ஒருவரிடம் தமது கவலையை சோபித்த தேரர் இவ்வாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார். தேசிய விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்கள் தீவிர பங்கு எடுப்பதன் மூலமும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் தேசிய விவகாரங்களில் இணைவதன் மூலமும் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய எதிர்மறை நிலைப்பாட்டை சிங்கள சமூகத்திடமிருந்து பிடுங்கி வீசலாம் என்றும் சோபித தேரர் முஸ்லிம் பிரமுகர்களிடம் சில தடவைகள் சுட்டிக்காட்டியதாகவும் அறியவருகிறது.
இன நல்லிணக்கத்திற்காக உரத்துக் குரல் கொடுத்த சோபித்த தேரர் போன்றவர்கள், முஸ்லிம்கள் குறித்து கொண்டிருந்த கவலையை போக்க வேண்டுமாயின் ,அறிந்தோ அறியாமலோ தேசிய விவகாரஙகளில் இலங்கை முஸ்லிம்கள் இன்னும் தீவிரமாக தமது பங்குபற்றுதலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment