Header Ads



"ஜேர்மனை பீடித்துள்ள, இஸ்லாமிய அச்சம்"

ஜேர்மனியில் எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் 2 கோடி இஸ்லாமியர்கள் குடியேறும் அபாயம் இருப்பதால், அந்நாட்டின் பொற்கால சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளதாக அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள பவேரிய ரகராட்சிகளின் தலைவரான Uwe Brandl ஒரு பரபரப்பு குற்றசாட்டை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியில் தான் அதிக அளவில் அகதிகள் குடியேறி வருகின்றனர். 2015ம் ஆண்டில் 15 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் வரவுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள 8 கோடி மக்கள் தொகையில், ஏற்கனவே சுமார் 50 லட்சம் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரம் வீதம் வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனியில் குடியேறும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையில், ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் தனது நாட்டின் கதவுகளை சுதந்திரமாக திறந்து வைத்துள்ளார்.

இதே நிலை நீடித்தால், எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் 2 கோடி இஸ்லாமியர்கள் வருகை தந்து, 2 கோடியே 50 லட்சம் இஸ்லாமியர்கள் ஜேர்மனி மக்கள் தொகையுடன் இணைந்துவிடுவார்கள்.

இதனால், பல நூற்றாண்டுகளால அமைதியுடனுன் புகழுடனும் இருந்த ஜேர்மனியின் பொற்காலம் முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது.

மேலும், அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் மூலம், ஜேர்மனி குடிமக்களின் வரிப்பணம் ஏராளமாக செலவிடப்படுகிறது.

குறிப்பாக, 4 நபர்களை கொண்ட ஒரு அகதி குடும்பத்திற்கு அரசு மாதம் 1,200 யூரோ வழங்கி வருகிறது. இதை தவிர, அவர்கள் தங்குவதற்கும் உணவிற்கும் ஏராளமாக செலவிட்டு வருகிறது.

ஆனால், ஜேர்மனியில் 30 வருடங்களாக பணியில் இருந்து வரும் ஒரு குடிமகனின் மாத வருமானம் இதனை விட குறைவாக இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

இஸ்லாமியர்களை அதிக அளவில் அனுமதிப்பதன் மூலம், பயங்கரவாதத்தையும் யூதர்களுக்கு எதிரான மற்றும் மதங்கள் தொடர்பான சிக்கல்களை தான் நமது அரசு விலை கொடுத்து வாங்குகிறது.

ஜேர்மனியில் ஏற்கனவே குடியேறி வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பவேரிய மாகாண நிதி அமைச்சரான மார்கஸ் சோடஸ் என்பவரும், இனிவரும் காலத்தில் ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியமானது என கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.