காய் வெட்டிய ஹக்கீம், செல்லாக் காசாகும் செயலாளர் நாயகம், பாரதூரத்தை அறியாத பேராளர்கள்
(ஜப்னா முஸ்லிமுக்காக பாதுஷா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் "கட்சியின் உயர்பீட செயலாளர்" எனும் பெயரில் ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு சம்மாந்துறையை சேர்ந்த மன்சூர் ஏ.காதர், கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அங்கீகாரம் இன்று (07) கண்டியில் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
உயர் பீடக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகளை தயாரிப்பது, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனான தொடர்புகளைக் கையாள்வது என்பன "கட்சியின் உயர்பீட செயலாளர்" என்பவரின் கடமை, பொறுப்புகள் என வரைவிலக்கனப்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
இப்புதிய பதவியை உருவாக்குவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் செயலாளர் நாயகம் என ஒரு மரபு நீதியான அதிகாரப் பதவி இருக்கத்தக்கதாக இப்புதிய பதவி உருவக்கப்பட்டிருப்பதன் மூலம் நீண்ட காலமாக கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்து வருகின்ற ஹசன் அலி அவர்களின் அதிகாரம் அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டிருப்பதாக ஊகிக்க முடிகிறது.
இதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் "செயலாளர் நாயகம்" எனும் பதவி அதிகாரமற்ற ஒரு அலங்காரப் பதவியாக மாத்திரமே இருக்கும் என கருதலாம்.
இவ்விடயம் இன்று பேராளர் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தாம் அங்கீகரிக்கும் தீர்மானம் இதுதான் என்கிற தெளிவு பேராளர்களுக்கு மாத்திரமல்ல உயர் பீட உறுப்பினர்களுக்குக் கூட இருக்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் ஹசன் அலி மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் அறிய முற்பட்ட போதிலும் அவர்களுடன் பேச முடியவில்லை.
எனினும் மு.கா.வின் உயர் பீட உயர் பீட உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்குறித்த விடயங்கள் உண்மையாக இருக்கக் கூடும் என அவர் ஏற்றுக் கொண்டதுடன் அச்செயற்பாட்டுக்கு தனது அதிருப்தியையும் நம்மிடம் வெளியிட்டார்..
இன்றைய பேராளர் மாநாட்டை முன்னிட்டு நேற்று இரவு இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருக்குமே என்று அவரிடம் வினவியபோது; "அங்கு அந்தளவுக்கு அது பற்றி தெரிவிக்கப்படவில்லை. அனைத்து பதவி நியமனங்கள் குறித்தும் தலைவரால் பிரஸ்தாபிக்கப்பட்டது போன்று பத்தோடு பதினொன்றாக "கட்சியின் உயர்பீட செயலாளர்" நியமனம் பற்றியும் சொல்லப்பட்டது. ஆனால் யாப்பில் இந்தளவு திருத்தம் செய்து செயலாளர் நாயகத்தின் முக்கிய அதிகாரங்கள் பல புதிய பதவிக்குரியவருக்கு கைமாற்றப்படுகிறது என்று உயர்பீட உறுப்பினர்கள் எவருக்கும் தெரியாது" என்று குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல இன்று பேராளர் மாநாட்டில் இவ்விடயத்திற்கு அங்கீகாரம் வழங்கும்போது கூட இப்பாரதூரத்தை எவரும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Mr.Hasan Ali should be the Secretary General, when Mr.Hasan Ali created the party Mr.Hakeem was a student in Law College, now he use the Party for earn millions, many leaders were ejected because of Mr.Hakeem greediness.
ReplyDeleteIf he plays more he will be punished more naturally.
MM
இது மிகவும் பரதூரமான விடயம். ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கட்சியை ஒரு ஹக்கீமின் கட்சியாக மாறிக்கொண்டிருப்பதை ஒரு காலமும் அனுமதிக்க முடியாது. இந்த புதிய செயலார் பதவி உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்து அதிகாரங்களும் பொது செயலாருக்கே கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் நிசாம் கரியப்பருக்கும், ஹரீஸ் எம்பி அவர்களுக்கும் ஹசன் அலி அவர்களுக்கும் மற்றும் ஏனைய கட்சியின் முக்கியமானவர்களுக்கும் இது சம்பந்தமாக உடனடியான நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகோள் விடுக்கிறோம். ஹகீம் அவர்கள் காங்கிரஸ் போராளிகளுக்கு காதில் பூவைக்க முனைகிறார். கபடத்தனமாக தனது சுயநலத்தை அரங்கேற்ற முனைகின்றார். காங்கிரஸ் போராளிகளே இது ஹக்கீமின் கட்சியா அல்லது முஸ்லிம்களின் கட்சியா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்களின் புத்தி ஜீவிகளுக்கும் துடிப்புள்ள இளைஞர்களுக்கும் முஸ்லிம் சிவில் சமூகத்துக்கும், சமூக ஆர்வலருக்கும் நாம் கூறுவது இதுதான் இந்த ஹகீம் இந்த முஸ்லிம் சமூகத்தை மிகவும் பலகீனமாக முன்னெடுத்து செல்கின்றார் என்பதை உங்களால் உணர முடியவில்லையா? ஹக்கீமின் தலைமைத்துவமும் அவரது உண்மைத் தன்மையும், ஆற்றலும், தகுதியும் சீர்தூக்கிப்பட வேண்டிய காட்டாய தேவை உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் பணிவுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ReplyDeleteBring Rishsad to the Eastern, let the so called national leader learn a lession from us. We had enough brothers it's time for a change -
ReplyDeleteBring Br.Rishad to the Eastern let us teach a lession to the so called national leader of SLMC we are tired and sick of him. He is living a luxury of our hardworks.
ReplyDelete