கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவராக, முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின்பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment