அர்ஜூன ரணதுங்க மாறிவிட்டார்
அமைச்சராக தெரிவானதன் பின்னர் அர்ஜூன ரணதுங்க தம்மை மாற்றிக்கொண்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய கப்பல்துறை அமைச்சரான அர்ஜூன 3.9 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய அலுவலக வீடு ஒன்றை கட்டதிட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சுக்கு அவ்வாறான வீடு அவசியம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
நல்லாட்சிக்காக பாடுபட்ட அர்ஜூன தற்போது அதற்கு துரோகம் செய்கிறார் என்றும் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Not only Ranathunge, most of the yahapalanaya heros have changed their colurs.
ReplyDelete