Header Ads



வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் ஜே.வி.பி,

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதில்லை என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை இல்லாத காரணத்தினால், அவர்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் அதிக சிரத்தை எடுத்துக்கொளவதில்லை. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ”அக்கரையில் நாம்” என்ற அமைப்பு, ஜே.வி.பி கட்சியின் ஊடாக நாடாளுமன்றில் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.

இதற்காக அடிப்படை சட்ட வரைவுகளை மேற்கொள்ள விசேட நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்குமாறு கோரியுள்ளோம். இந்த யோசனைக்கு 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கே உரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் பற்றி பேசுவதில் உள்நாட்டு அரசியல்வாதிக்கு பயனில்லை.

வாக்குரிமை அற்ற நிலைமையே இதற்கான பிரதான காரணமாகும். வாக்குரிமையுடையவர்கள் பற்றி மட்டுமே அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போது சமூக வலைத் தளங்களின் ஊடாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

எனினும், வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பாளர்கள் என அக்கரையில் நாம் அமைப்பின் தலைவரும், ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினருமானு சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Thank you very much sir for your suggestion about us, government earning lots of foreign currency though us but they not thinking even single benefit for us.
    Our former president start vehicle permit and pension system for us but new government still not approve and never think about us.
    Most of the people are returning after 50 years old but we don’t have any support from the government.
    Kindly raise some system like pension or program, you can start any taxi in our sending money .

    ReplyDelete
  2. why only benefiting from foreign currencies etc, how foreign employees are sacrificing. so at-least voting, vehicle permit system, pension scheme etc should be implemented. very very important its foreign employees rights,,,,

    ReplyDelete

Powered by Blogger.