அநுரகுமாரவின் அதிரடித் தாக்குதல், நிலைகுலையும் அமைச்சரவை..!
-நஜீப் பின் கபூர்-
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளே இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன் இந்த அரசை பதவிக்கு அமர்த்துவதில் வெகுஜன இயக்கங்களும் முக்கிய பங்காளிகளாக இருந்து வந்தன.
ஆனால் இன்று இந்த ஊழல் மோசடி, கொள்ளையடிப்பு விடயங்களில் நடவடிக்கைகளை மேற் கொள்ள முனைகின்ற போது அதற்கு எதிராக அதாவது ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் சில ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை அதே அமைச்சரவையில் அங்கம் பொறுகின்ற அமைச்சர்களே விடுக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னாவும், பாட்டலி சம்பிக்கவும் இவ்வாறு நடந்து கொள்கின்ற அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். அத்துடன் இது விடயத்தில் நேர்மையாக விசரனைகள் நடைபெற விட்டால் தாம் இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறவும் தயங்கப்போவதில்லை என்று எச்சரித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரி இது விடயத்தில் இதயசுத்தியுடன் நடந்து கொள்கின்ற போதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் செயல்பாடுகள் பெரும் சந்தேகத்திற்கிடமாக இருக்கின்றது.
குறிப்பாக பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போன்றவர்கள் விடயத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அமைச்சரவையில் அவன்கார்ட் விவகாரமாக எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் திலக்மரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் அமைச்சரவைத் தீர்மானம் அல்ல அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஏனைய அமைச்சர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
திலக் மரப்பன கருத்துத் தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்டிருப்பதுடன் அமைச்சரiவையில் இந்த விவகாரம் தெடர்பாக கடும் மோதல்கள் நடந்ததால் இடையில் குறுக்கிட்ட ஜனாதிபதி மைத்திரி இதற்காக தனியாக ஒரு அமைச்சரவைக் கூட்டம் போட்டு அமைதியாக விவாதிப்பேம் என்று அங்கு நிலமையைச் சமாளித்திருக்கின்றார்.
இதனை பீல்ட் மார்சல் பொன்சேக்காவின் வார்த்தைகளில் சொன்னால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவுக்கு பணத்துக்காக வக்காளத்து வாங்குகின்றார். என்று நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றார். இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பொன்சேக்க கூறிவந்தார். பொன்சேக்காவின் இந்தக் கூற்றுக்கு எதிராக தான் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக பதிலுக்கு விஜேயதாச குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கின்ற நேரம் தான் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவின் சவாலை ஏற்றுக் கொள்வதாகவும் தனது குற்றச்சாட்டு தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது. தற்போதய நீதி அமைச்சர் விஜேதாச தொடர்பில் தனது நிலைப்பாடு இதுதான் என்று தொலைக் காட்சியில் பீல்ட் மார்சல் பொன்சேக்கா அடித்துக் கூறிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் திலக் மாரப்பன அவன்கார்ட் விவகாரம் சட்டரீயானது என்று கூறிவருகின்றார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கோத்தாபே ராஜபக்ஷவைக் கைது செய்யக் கூடாது- முடியாது என்றுதான் கட்டளையிட்டதாக கூறி இருந்தார். இது பற்றி அமைச்சர் ராஜித ஒரு ஊடகச் சந்திப்பில் சட்ட மா அதிபர் இவர்களைக் கைது செய்ய அங்கிகாரம் வழங்கி இருந்தார். கைது இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது நடக்க வில்லை. தேடிப் பார்த்தால் அதிகாரிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கட்டளை பிறப்பிதிருந்தார் என்று அறிந்து கொள்ள முடிந்தது என்றார் ராஜித.
இது பற்றி ஒரு செய்திக் குறிப்பைச் சொல்லி இருந்த கொழும்பு ரிப்போர்ட் இணையத்தளம் அமைச்சர் திலக் மரப்பன மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய தேசியக் கட்சியின் முகவராக செலாற்றுகின்றார் என்று குற்றம் சாட்டி இருக்கின்றது.
எனவே அமைச்சரவையில் இருக்கின்றவர்களே, ராஜபக்ஷாக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சில ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை உண்டு பண்ணுகின்றார்கள். இப்படிப்போனால் மக்கள் இந்த அரசைக் கவிழ்து விடுவார்கள் என்று அவர்களின் வாயாலே செல்லி வருகின்றார்கள்.
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக இருந்து தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குகாக ஆஜராகின்ற ஐ.தே.க. அமைச்சர் திலக் மாரப்பன இந்த அவன்கார்ட் விவகாரங்களில் எப்படி நடுநிரையாக நடந்து கொள்ள முடியும். சில வேலை ராஜபக்ஷாக்களின் சிபார்சின்படிதான் இந்த அமைச்சர்களை ரணில் நியமித்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

Ranil has only 2 options,; Either he should remove those culprits from the Cabinet or resign himself from the premiership. Otherwise, he will prove that dissolving Ranil's Govt. in 2003 by Chandrika is correct.
ReplyDeleteHon. Wijeythjasa RP also is a family member of MR. Is not it?
ReplyDeletesure that's why he has told that Gota be can't be arrested.
ReplyDelete