வெள்ளை வான் குறித்து, கோத்தாவின் விளக்கம்
இராணுவ புலனாய்வு பிரிவினரே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்கடத்தலிலும் காணாமல் போக செய்ததிலும் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
வெள்ளை வான்களை பயன்படுத்தி ஆட்களை கடத்திச் சென்ற சம்பவங்கள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடு குறித்து தானே கேட்கிறீர்கள்?. 88ம் 89ம் ஆண்டுகளில் கறுப்பு வான்களை பயன்படுத்தியா கடத்தினர் என கேட்டுள்ளார்.
குற்றவாளிகளே வெள்ளை வான்களை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள், குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை பிடிக்க புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தப்பட்ட வானையே வெள்ளை வான் என்கின்றனர்.
இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செயற்படவில்லையா?. ஜே.வி.பியின் காலத்தில் கறுப்பு வான்களிலா இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டனர்?. இதனை அனைவரும் மறந்து விட்டனர்.
எவர் மீதாவது சேறுபூச வேண்டுமாயின் எதனையாவது அடிப்படையாக கொண்டு கதைகளை புனைவார்கள். இது மிகவும் தவறானது. எமது சமூகம் அனைத்தும் சிறந்த நியாயமான சமூகமல்ல. சகல காலங்களிலும் தவறுகள் நடந்துள்ளன என்றார்.

He is justifying that abduction by Army Intelligent unit is legal. This is possible only in the fool paradise (SRILANKA).
ReplyDeleteமற்றவர்கள் செய்தவை இருக்கட்டும். நீர் செய்தீரா இல்லையா....?
ReplyDelete