Header Ads



நீர்க்காகங்களை பயன்படுத்தும், மகிந்த ராஜபக்ச

கழுத்தை இறுக்கி நீர்க்காகங்களை பயன்படுத்தி சீனர்கள் மீன்பிடிக்கும் முறையை போல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களை பிடிக்க நீர்க்காகங்களை பயன்படுத்தி வருவதாக கிராமிய பொருளாதார அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

தலாவ பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் பிடித்து இழுக்க விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்ற நீர்க்காகங்களை பயன்படுத்தி வருகிறார்.

சீனர்கள் மீன்பிடிக்க செல்லும் போது சில நீர்க்காகங்களை பிடித்து படகில் போட்டுக்கொண்டு, நீர்காகங்களின் கழுத்து சற்று இறுகும் வகையில் பட்டியல் கட்டுவர்.

அந்த நீர்க்காகங்களை குளத்தில் போட்டதும் அவை ஆழம் வரை சென்று பெரிய மீன்களை பிடித்து கொண்டு மேலே வரும்.

அவை மீனை பிடித்து கொண்டு வந்தாலும் அவற்றை நீர்க்காகங்களால் உண்ண முடியாது. நீர்காகம் படகிற்கு அருகில் வந்து மீனை போடும். இப்படித்தான் சீனர்கள் மீன்பிடிப்பார்கள் எனவும் ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.