ஷாருக்கான் இந்தியாவில் வசித்தாலும், அவருடைய இதயம் பாகிஸ்தானில் உள்ளது - பா.ஜ.க.
நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட இயக்குநர்கள் தங்களுடைய விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் ரசிகர்களிடையே உரையாடிய போது ஷாருக்கான் கூறியதாவதாவது:-
”இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து வருகிறது. மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்து வருவதால், நாட்டுக்குதான் பாதிப்பு ஏற்படும். நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில் நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.
மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும். இல்லை என்றால் தேசப்பற்றின் பெயரால் மோசமான செயல்கள் நடக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பா.ஜ.க. தலைவர்கள் பல சர்சைகுரிய கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக ஷாருக்கான் இந்தியாவில் வசித்தாலும் அவருடைய இதயம் பாகிஸ்தானில் உள்ளது என்று பா.ஜ.க., தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா கூறியுள்ளார்.
மேலும் ஷாருக்கான் படங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது, ஆனால் இது சகிப்புதன்மையின்மை நாடாக அவருக்கு தெரிகிறது.
இதேபோல், பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் பா.ஜ.க., பெண் எம்.பி சத்வி பிரச்சி, ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும் அவர் பாகிஸ்தானுக்கே செல்லட்டும் என்று விமர்சித்துள்ளார்.

This comment has been removed by the author.
ReplyDeleteராஜபக்ஷ பாணியில் மோடியும் நடந்துகொள்வாராயின் அவருக்கு நடந்ததுபோலவே அல்லது அதைவிடக் கேவலமாக தூக்கி வீசப்படுவார்.
ReplyDelete