பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி
பசு வதை செய்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று உத்தரகாண்ட மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்றார். பசுவை கொள்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி, அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை இல்லை என்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும். மேலும் பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்யும் என்றும் கூறினார்.
தன்னுடைய அரசில், பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை தான் தாக்கல் செய்ததாகவும், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவணமும் வழங்கிவருகிறது என்றும் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்னும் இடம் அருகே மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கூறி இக்லாக் என்பவர் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதனையடுத்து நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இவ்விவகாரம் தொடர்பான நிகழ்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கருத்து அமைந்துள்ளது.

முதல்ல ஒரு விசயத்தை இந்த இந்துத்வா கொள்கை கொண்டவர்கள் தெளிவுபடுத்துங்க... நீங்கள் எதிர்ப்பது பசுவதையா இல்ல மாட்டிறைச்சிக்கு எதிரானதா.. ஏனெனில் பசு மட்டும் தான் என்றால் அது ஒன்றும் பெரிய விசயம் அல்ல ஏனெனில் என்னளவில் நான் அறிந்தவரை பசு மாமிசம் யாரும் உட்கொள்வதில்லை. இல்லை மாடு தான் என ஒட்டுமொத்தமாக எடுத்தால் நீங்க முதலில் தடை செய்ய தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்த நாட்டை உலக அளவில் முதலிடம் கொண்டு வந்த மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் தான்... முதலில் அவர்களை முடக்கிவிட்டு பின் பொதுமக்களிடம் வாருங்கள். மனிதனை விட மாட்டிற்கு ஒரு அறிவு குறைவு தான்.
ReplyDeleteபசுக்களுக்கு கொட்டகை அமைத்து சாப்பாடு போடும் இந்த பொறம்போக்கு இந்தியாவில் எத்தனை இலட்சம் மக்கள் ஒரு நேர சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.பசு முக்கியமா மனிதன் முக்கியமா என்று பிரித்தரியக்கூட தெரியா கலுதைகளையல்லாம் வாக்களித்து சிம்மாசனத்தில் ஏற்றிய மக்கள்தான் குற்றவாளிகள்.இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்துத்துவம் பேசிப்பேசி இவனல்லாம் எந்த முன்னேற்றத்தை கண்டான்.இந்தியா வல்லரசாக மாறும் என்று சொல்லும் இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகள் எதில் வல்லரசு இனத்துவேசத்திலா? அல்லது கற்பழிபிலா? அல்லது கோடிகோடியாய் கொல்லையடிப்பதிலா?இன்றைக்கு உலகத்தில் கேவலமாக பேசப்படும் ஒரு நாடு இந்தியாதான் என்பதை இந்த மாட்டுக்கு பிறந்த மாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ReplyDeleteமுட்டாள் மனிதர்களே!
ReplyDeleteஉன் சக மனிதனுக்கு உதவாத அன்பையும் காருண்யத்தையும் நீங்கள் மிருகங்களுக்கு காண்பித்து என்ன பயன்..?