Header Ads



பொருட்களை விலைகூட்டி வர்த்தகர்கள் விற்கிறார்களா..? உடனடியாக இங்கு முறையிடுங்கள்

பண்டிகைக் காலத்தில் அதிக விலைகளில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சேவைகள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டம் விரிவாக முன்னெடுக்கப்படும் என்று, அதன் நிறைவேற்று பணிப்பாளர் ருவான் லங்கேஸ்வர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் விலைக்குறைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான வர்த்தமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பருப்பு, நெத்தலி, கருவாடு, கடலை தானியங்கள், பால்மா போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அதிக விலையில் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வர்த்தகவர்கள் தொடர்பில், 011 7 755 481,  0117 755 482 ஆகிய இலக்கங்களுக்கு முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

1 comment:

  1. Government had reduced the price for wheat flour and gas. But there is no any price reduction for the short eats items and bakery items by the tea shops. The consumer affair authority is not yet take any action against them.

    ReplyDelete

Powered by Blogger.