Header Ads



முஸ்­லிம்கள் மீண்டும் எம்­முடன் இணை­வார்கள் - மஹிந்த ராஜபக்ஷ

-ARA.Fareel-

இஸ்ரேல் பலஸ்­தீன் மக்கள் மீது மேற்­கொள்ளும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் அல் அக்ஸா பள்­ளி­வாசல் முற்­று­கை­யையும் வன்­மை­யாக  கண்­டிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

இலங்கை இஸ்ரேல் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­மாயின் அதனை தான் விரும்­ப­வில்லை எனவும் அவர் கூறினார்.

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,

முஸ்லிம் நாடுகள் எப்­போதும் இலங்­கை­யுடன் நல்­லு­ற­வையே பேணி­வந்­துள்­ளன. இலங்­கைக்கு எதி­ராக ஜெனி­வாவில் கடந்த காலத்தில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையின் போது முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்தே வாக்­க­ளித்­தன.

இலங்கை பலஸ்­தீ­னர்­களின் நட்பு நாடாகும். எனது ஆட்சிக் காலத்தில் பலஸ்­தீன ஜனா­தி­பதி எமது நாட்­டுக்கு நல்­லெண்ண விஜ­யத்­தினை மேற்­கொண்டார். நானும் பலஸ்­தீ­னத்­துக்கு விஜயம் செய்­துள்ளேன். இதன் மூலம் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் வலுப்­பெற்­றன.

பலஸ்­தீன மக்­களின் உரி­மை­க­ளுக்­காக ஐக்­கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடர்­களில் நான் குரல் கொடுத்­தி­ருக்­கிறேன். தொடர்ந்தும் பலஸ்­தீன மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்பேன்.

பலஸ்­தீன மக்­க­ளதும் முஸ்­லிம்­க­ளதும் நண்­ப­னான என்னை முஸ்­லிம்­க­ளி­லி­ருந்தும் சதி செய்து பிரித்­தெ­டுத்­தார்கள். காலப்­போக்கில் உண்மை நிலையை உணர்ந்து முஸ்­லிம்கள் மீண்டும் எம்­முடன் இணை­வார்கள்.

எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் நாடுகள் எமக்கு வழங்கிய உதவிகளை மறக்க முடியாது என்றார்.

6 comments:

  1. நன்றியுள்ள மி.....

    ReplyDelete
  2. அப்பப்பா என்ன நன்றியுணர்வு

    ReplyDelete
  3. இது குதிரை கொம்பு சார்! இதுவரைக்கும் நடந்த பலள்ளிவாயல்,பேருவல சம்பவம் போன்றவைக்கு முஸ்லிம்களிடம் ஒரு மன்னிப்பு இல்லியே! எப்படி சார் ரோசமுள்ளவன் சேருவான்

    ReplyDelete
  4. Thanks you sir. But your government had big relationship with isreil at your ended period. We known that well. If you want to get the support fom Muslim community again, you must show your true mind and mind based action without any double games

    ReplyDelete
  5. சாரு எப்போவிடியும் பகல் கணவுகானுவோம் என்ரு காத்துக்கிடக்கார் அப்படி கன்டகணவைதான் இப்போ சொலியுள்ளார்

    ReplyDelete
  6. let him enjoy his self

    ReplyDelete

Powered by Blogger.