Header Ads



வாக்குப்பிச்சை கேட்டு வந்த அரசியல்வாதிகளை, மஸ்ஜித் வீதிக்கு வரும்படி கோரிக்கை

-றபாய்தின்பாபு ஏ.லத்திப்-

குச்சவெளி காசிம் நகர் கிராம சேவகர் பிரிவு  பிரதான மஸ்ஜித் வீதி குன்டும் குழியுமாக இருப்பதால் பாதைசாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சுனாமிக்குப்பின்னர் சீர் செய்யப்பட்ட இவ்வீதிக்கு வடிகாண்கள் போடப்படவில்லை. 

அரை கிலே மீற்றர் நீளமான    வீதி இருமருங்கிலும் பாலமாகப் பிளந்து பாதை குன்டும் குழியுமாக இருப்பதால் வாகணங்கள் போக்குவரத்துச் செய்ய முடியாதுள்ளது. 200 வருடங்கள் பழைமை வாய்ந்த குச்சவெளியின் பூர்வீகமுஸ்லிம்கள்    இவ்வீதியில் வாழுகின்றனர்.

இவ்வீதக்கு தெருவிக்குகள் பொருத்தப்படவில்லை இரவில் நடமாடுவதும் பெரும் கஸ்ட்டமாக இருக்கிறது  என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் வாக்குப்பிச்சை கேட்டு வந்த அரசியல்வாதிகளை ஒரு தடைவயேனும் இவ்வீதியால் வந்து போகுமாறு  பொதுமக்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.