இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துபவர்கள், பெரும் தவறு செய்கிறார்கள் - துர்க்கி ஜனாதிபதி அர்துகான்
-Musthafa Ansar-
"தாயிஷு (ISIS) க்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.":
துர்க்கி ஜனாதிபதி அர்துகான் Recep Tayyip Erdoğan
"இன்றைய மனிதாபிமான சோகக் கதைகளினதும் தீவிரவாத செயட்பாடுகளினதும் பிரதான குற்றவாளி அஸாத் ஆகும்," "அஸாத் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்"
"அவருக்கு துணைபுரியும் அனைவரும் அவரைப் போல் குற்றவாளிகளே"
"பிராந்தியத்தில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புக்களும் அஸாதுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போகின்றன"
"தாயிஷ் ISIS) அசாதின் உதவியைப் பெறுகின்றது"
தாயிஷ் இன் மசகு எண்ணையை அசாத் பெற்று, அதை பணமாக மாற்றிக்கொடுக்கிறார், இதைக் கண்டுகொள்ளாத ஒருவர் குருடாக இருக்க வேண்டும். இது தான் உண்மை"
தாயிஷின் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்த முனைபவர்கள் பெரும் தவறைச் செய்கிறார்கள்"
"உண்மை என்னவென்றால், தாயிஷ், அல் காஇதா போகோ ஹராம் உட்பட அனைத்து தீவிரவாத அமைப்புக்களாலும் கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்களே"
இப்படியான இயக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த அமைப்புக்களால் கொல்லப்படும் ஒவ்வொருவரினதும் இரத்தம் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் சக்திகளின் கைகளிலும் இருக்கிறது.
"நான் நம்பிக்கை கொண்டுள்ள மார்க்கத்தை நம்புவதாகக் கூறிக்கொள்ளும் இந்த தீவிரவாதிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."
"இந்த தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை ஒன்றுபடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்"
நீங்கள் ஒன்றுபடாவிட்டால், இன்று அங்காராவில் எமது கதவைத் தட்டிய இவர்கள் நாளை உங்கள் கதவையும் தட்டுவார்கள்.
தாயிஷைப் பார்த்து இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துபவர்கள் பெரும் தவறைச் செய்கிறார்கள்.
தாயிஷுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Post a Comment