வாழ்கையை இவ்வாறும் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் யதார்த்தம் புரியும்...!
-அனீஸ் பின் அலி முஹம்மத்-
மனித வாழ்க்கை எனப்படுவது இறைவனால் கிடைக்கப்பெற்ற ஒரு வரம். இதனை நாம் எந்தளவு உண்மையாகவும் உறுதியாகவும் அர்த்தமுடையதாகவும் வாழ்கின்றோமென அவரவர் உள்ளங்களைக் கேட்டுக் கொண்டால் புரியும். வளர்ச்சியடைந்து வரும் இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கையும் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மனிதன் தனது அறிவை வளர்க்க முயல்கிறான்,செல்வத்தை வளர்க்க முயல்கிறான், ஏன் மனிதன் தன்னை சூழவுள்ள அனைத்தையுமே வளர்க்க முயல்கிறான். ஆனால் மனித வாழ்க்கைக்கு உண்மையையும் அதன் இருப்பையும் நிலைநிறுத்தக்கூடிய அன்பையும் மனிதநேயத்தையும் வளர்க்க மறந்து விடுகிறான். மனித வாழ்க்கையை அழகாக்கும் அரிய காரணியை வளர்க்க மறந்து விடுகின்றான்.
நாகரிக வளர்ச்சி, நாகரிக வாழ்க்கை என கொள்கை பேசும் இந்த உலகில் ஐந்தறிவு கொண்ட அற்ப ஜீவராசியின் மேல் கொண்ட அன்பையும் மனிதநேயத்தையும் ஆறறிவு கொண்ட மனித வர்க்கத்தின் மேல் வைக்க மறுக்கின்றான் மனிதன். பாதையில் எப்பொழுதாவது எம் கண்முன்னே ஒரு நாய் உயிருக்கு போராடும் தருணம் கவலை கொள்ளும் மனித உள்ளம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எம் கண்முன்னேயும் கேள்வியுற்றும் பறிபோகும் பல மனித உயிர்களுக்காக கவலை கொள்ளாது இருக்கின்றது.
சொத்து, செல்வத்தை சேர்ப்பதில் மாத்திரமே கவனம்.
காரணம் பொறாமை, மதம் மேல் மதம் கொண்ட பொறாமை, மனிதன் மேல் மனிதன் கொண்ட பொறாமை.
காரணம் சுயநலம், தான் மட்டும் வளர்ந்தால் போதும், தன்னை மட்டும் வளர்த்தால் போதும் என்ற சுயநலம்.
காரணம் பொடுபோக்கு, தன் உயிர் போன்று பிற உயிர்களையும் கணக்கில் கொள்ளாத பொடுபோக்கு.
காரணம் மார்க்கத்தில் விளக்கம் குன்றியமை,
வேலைப்பழு, நேரமின்மை, மற்றும் பல்வேறு சுமைகள்
இவ்வாறு பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பயனில்லை. வினாக்களே அறிய முடியா வாழ்க்கையில் மனிதன் விடை தேடி அலைகின்றான். முட்டாள்தனம். மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து சிறு புன்னகைக்க பகட்டிக் கொள்கிறான். மனைவியை கணவன் பார்த்து சிறு புன்னகை சிந்த பகட்டிக் கொள்கிறான், தாயை அதன் பிள்ளை பார்த்து புன்னகை செய்ய பகட்டிக் கொள்கிறது. அவ்வளவு கேவலாமான ஒரு பரம்பரையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம்.
பணத்தை மாத்திரமே கொண்டதான வாழ்க்கை கோலம் கொண்டவர்களாக மனிதவர்க்கம் மாறி வருகின்றது. பணத்தை மையப்புள்ளியாக வைத்து மனிதன் அதைச் சுற்றி சுற்றி வலம் வருகின்றான். இறைவனதும் தூதரினதும் வழிக்காட்டலை மறந்த ஒரு சமூகமாக எமது சமூகம் மாறி வருகின்றது. அற்பமான அழிந்து போகக்கூடிய பணத்திற்கு கொடுக்ககூடிய மதிப்பை ஏன் மனிதர்களுக்கு கொடுக்க மறுக்கின்றோம்?
அடுத்த நிமிடம் உத்தரவாதமில்லாத மனித வர்க்கம் அன்பை பரிமாற்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போட்டி பொறாமையின்றி சுயநலமில்லாத அழகான சகோதரத்துவ வாழ்க்கை முறையை ஏன் வாழ விரும்புவதில்லை?
அடுத்த நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளைக் கூட துப்புத் துலக்கி அறிக்கை விடும் பலர் தன்னை சுற்றியுள்ள தனது குடும்பம், தனது சமூகம் எவ்வாறான சூழலில் இருக்கின்றதென்பதை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். இன்றைய உலகில் மனிதனை மனிதன் கொலை செய்கின்றான். ஆயுதங்களால் ஒரு புறமும் வார்த்தைகளால் மறுபுறமும். உலகில் என்ன நடக்கின்றது, என்ன நடக்கும் என்பதைப் பற்றி கரிசனை கொள்ளாத எதிர்கால சிந்தனையில்லாத அற்ப சுகங்களுக்காக அடுத்த உயிரைக்கூட அழித்து வாழக்கூடிய கொடூரமான் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சிறு நிலப் பிரச்சினை சகோதரனை சகோதரன் கொலை செய்தான், தொலைபேசி வாங்கிக் கொடுக்க மறுத்த தந்தை பெற்ற மகளால் குத்திக் கொலை, காதலுக்கு எதிர்ப்பு பெற்றோரை காதலனுடன் இணைந்து கொலை செய்த மகள், சொத்தில் பிரச்சினை மகன் தந்தையை கொலை செய்தான், இவை எல்லாம் நான் பார்த்த பத்திரிகை செய்திகளின் சில தலைப்புக்கள்.
காஸா-இஸ்ரேல் பிரச்சினையை தீர்க்க வேண்டும், ஆப்கான்-அமெரிக்க பிரச்சினை தீர வேண்டும், வடகொரியா-தென்கொரிய பிரச்சினை தீர வேண்டும், மத்தியகிழக்கு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாய்ச் சவடால் விடும் பலர் தான் நடந்து செல்லும் பாதையில் அவர்கள் கண்முன்னே நடக்கும் ஒரு அநியாயத்தை தட்டிக் கேட்க துப்பில்லாத முதுகெலும்பற்ற மனிதர்களாகவே இருக்கின்றனர். இதனை எவரும் மறுப்பதற்கில்லை, ஏனெனில் இதுதான் யதார்த்தம்.
அன்பு,மனிதநேயம் என்பன பிறப்பில் ஒட்டிப் பிறந்த ஒன்றல்ல, மாறாக மனிதன் மற்றும் அவனைச் சூழவுள்ள அனைத்தும் வளர வளர அதனையும் கூடவே அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். கண்ணில் காண்பவரையெல்லாம் ஒரு சின்ன புன்னகை கொண்டு பார்த்தால் போதுமானது, உணவகம் அங்கு சென்றால் வேலை செய்பவருக்கு நன்றி சொல்லுங்கள், பாதையில் யாசகம் கேட்பவரைக் கண்டால் முதல் கேள்வி சாப்பிட்டீர்களா? எனக் கேளுங்கள், காரணம் பணம் கொடுத்தால் அவர்களது பை நிறையும் உள்ளம் அன்பைக் கொடுத்தால் மாத்திரமே நிறையும், உயர் அதிகாரியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு கீலுள்ளவர்களையும் மனிதர்களாக எண்ணி பழகுங்கள், கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் “நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்” என அடிக்கடி கூறுங்கள். பிள்ளைகளுடன் நாளில் ஒருமுறை இல்லையெனினும் வாரத்தில் ஒருமுறை சரி ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுங்கள்,
பணத்தை மறந்து மறைத்து அன்பையும் மனிதநேயத்தையும் உலகில் விதைக்க முயலுங்கள்.
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்,

But how ?..
ReplyDeleteDid ur religion mention Hindus buddies are kafir or in fields. ....coz we r not dhimmis. ..then how do u expect a brotherhood from u ?....according to quoran we r infidels
Excellent read, Masah Allah.
ReplyDeleteDear Mahendran,
ReplyDeleteif you are not ready to accept the truth, and want to be as you are, that's ok, we have no problem. But the problem is common issue as all are human being with almost same shape, same blood and thinking power or brain work, and same courtesy. so, we want every one to live harmony and supportive at least in common livingness, make smooth function of our life. it does not mean that we must be as brother, rather can be as just gentleman who can live without disturbing others, but help others if like. dont hurt others! this is what the writer here wanted to say.