பீ.ஜே.யின் வருகையை தடுத்தநிறுத்தியதும், அவதூறுகளின் தீமைகளும்..!
-M.JAWFER.J P-
அண்மையில் நடந்த சின்ஹல மொழிமூலம் குர்ஆன் வெளியீட்டு விழாவை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தார்கள் நடத்தி வைத்தார்கள்.இதற்க்கு தென்னிந்திய இஸ்லாமிய தமிழ் பிரச்சாரகர் சகோ பீ ஜே அவர்களுக்கும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது யாவரும் அறிந்த விடயம்.
இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.கடந்த காலங்களில் சகோ பீஜே வந்தபோது பல எரிப்புகள் கியம்பியதும்,தற்போதும் பல கொள்கைவாதிகளிடத்தில் அவருக்கு எதிப்பு இருப்பதும் நாம் கண்களால் பார்க்கிறோம் காதுகளால் கேட்டும் வருகிறோம். ஆகவே சம்மந்தப்பட்ட ஜமாத்தார் இவரின் வருகைக்காக வேண்டிய தடைகள் எங்கிருந்து வந்தாலும் அதனை தடுத்து இருத்தும் அதிகாரம் படைத்தவர்களை முதலில் சந்தித்து பேசவில்லை என்பது ஒரு குறைதான். அதாவது எந்தவகையான கஷ்டப்பட்டாலும் ஜனாதிபையையும்,பிரதமரையும் நேரடியாக சந்தித்து இதிலுள்ள சகல விளக்கங்களையும் வரக்கூடிய எதிப்புகள் அதை முறியடிக்கக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆலோசலை செய்து இருக்க வேண்டும்.ஆனால் தவ்ஹீத் ஜமாத் அவர்களிடம் சரி என்று சொன்ன அதிகாரிகளின் வாக்கை நம்பினார்கள் என்பதுதான் உண்மை.நம்பித்தான் ஆக வேண்டும் ஏன் என்றால் பீஜே வருவதால் இங்கு இலங்கை இறைமைக்கோ தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் வரப்போவது இல்லை.
இங்கு ஒன்றை நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும் பீஜே யின் இஸ்லாமிய கொள்கையில் சில மசாலாக்களில் அவருக்கும் ஏனைய கொள்கையுடையவர்களுக்கும் சில கருத்து மோதல் இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படை கொள்கையில் ஓன்று பட்டவர்களாகவே உள்ளனர்.iஇவ்வாறான பிரச்சினை நமக்கு வெளியில் இருக்கம் முஸ்லிம் அல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு தெரியாது அவர்கள் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் பரம எதிரியாக வாழ்கிறார்கள் என்ற முடிவில்தான் அவர்களின் முஸ்லிம் மக்களின் விடயங்களில் பார்வையை செலுத்துகிறார்கள்.
இவர்கள் குழப்பம் வரும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஒரு தீவரவாதியும் இல்லை,கொள்ளை குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றங்களின் முன் நிருத்தப்பட்டவரோ இல்லை,விபச்சாரகுற்றத்தில் சிக்கி முஸ்லிம் சமுதாயத்தின் முன் குற்றம் உள்ளவர் என்று உலமாசபையாலோ அல்லது ஏனைய ஜமாத்தாலோ குற்றம் சாட்டப்பட்டு கேவலப்பட்டவரோ இல்லை என்பது மட்டும் உண்மை.
கடந்த காலங்களில் இவரால் பிரச்சினை வந்தது என்று வாதாடும் ஒவ்வொருவரும் அதனை நன்கு தெளிவாக பார்க்க வேண்டும் அந்த இடத்தில் குழப்புவதற்காக சிலர் போய் குழப்பினார்களா? அல்லது இவரும் இவருடைய கூட்டான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தார்ரும் சேர்ந்து ஏனைய ஜமாத்தாரின் இடங்களுக்கு சென்று குழப்பத்தை ஏற்ப்படுத்தினார்களா? உண்மையாக இந்த விடயம் பல பிரச்சினையை ஏற்ப்படித்தியுள்ளது.
இளம் வாலிபர்களாக இருக்ககூடியவர்களிடத்திலும் இளம் உலமாக்களிடமும் ஒருவரை ஒருவர் அவதூறு சொல்லும் அளவுக்கு இணைய தளங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.ஒரு தரப்பு உலமா சபையை சாடுவது இன்னொரு தரப்பு தவ்ஹீத் ஜமாத்தை சாடுவது இவ்வாறு பகை வளர்ந்துகொண்டுதான் செல்கிறது.இதில் வியப்பு எனக்கு தெரிந்த ஒரு ஹாபிஸ் மௌலவி எழுதுகிறார் கடந்த முறை வந்த பீ ஜே பண்டி இறைச்சியை ஹலால் என்று சொன்னார்,இம்முறை கபரகொசான் ஹலால் என்று சொல்வார் ஆகவே பீ ஜே வந்து போனவுடன் கபரகொசான் புரியாணி தயார் என்று எந்த விதமான அல்லாஹ்வுடைய அச்சமும் இல்லாமல் எழுதுகிறார்.நான் பீ ஜே வுடைய ஆளும் இல்லை எனக்கும் அவருக்கும் சம்மந்தமும் இல்லை.பண்டி இறைச்சி விடயமாக அவரின் முழுமையான பயானை கேட்ட வகையில் அவர் அவ்வாறு சொல்ல வில்லை.ஆனால் சொல்லாத ஒன்றை முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறான உலமாக்களே பரப்பி மக்களை வேண்டுமென்றே பகைவர்களாக்குவது எந்த வகையில் நியாயம். இன்னும் சில உலமாக்கள் செருப்படி சம்மந்தமான கருத்துக்களைத்தான் விதைத்தார்களே தவிர உண்மை எது என்று கூட எழுதவில்லை.மார்க்க அறின்ஞர்கள் என்று சொல்லும் இவர்கள் இவ்வாறு தீர விளப்பம் இல்லாமல் முண்டியடித்துக்கொண்டு அவதூறு செலுத்தும் போது சாதாரன மக்களின் நிலை என்ன? அவர்களிடம் எவ்வாறு உண்மையான இஸ்லாம் போய் சேருவது.இவர்கள் எழுதும் இந்த அவதூறு பற்றி அல்லாஹ் கியாமத்து நாளில் கேள்வி கேட்க மாட்டான் என்று இவர்கள் இருக்கிறார்களா?
இவர்களிடம் கேட்டால் நாங்கள் உலமா சபையின் அங்கத்தவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற அகம்பாவத்தில் பேசுகிறார்கள்.உண்மையில் இது உலமா சபைக்கு தெரியாதா? இவ்வாறு இந்த இளம் உலமாக்களிடம் பகை வளர்ந்து கொண்டே போனால் எதிகாலத்தில் இவர்களிடம் எவ்வாறு ஒற்றுமை உருவாகும்.இதனை முஸ்லிம்களின் வழிகாட்டிகள் நாங்கதான் என்று சொல்லும் உலமா சபை கண்டும் காணாததுபோல் இருக்கும் மறுமம் என்ன? யாராக இருந்தாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் இந்த மாதிரி தூண்டி விட்டு தள்ளி நின்று புதுனம் பார்க்கும் வேலையை நிறுத்த வேண்டும் இவர்களின் இந்த ஒவ்வொரு நடவடிக்கையும் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையைத்தான் உருவாக்குகிறது.ஆகவே இயக்கவாதிகளே,உலமாக்களே,பாமர மக்களை விட நீங்கள் அல்லாஹ்விடம் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.இலங்கையின் இன்றைய நிலையில் இவ்வாறான பிரிவினைகளை உண்டு பண்ணி அதில் குளிர் காய நினைக்க வேண்டாம்.
வஸ்ஸலாம்

Makkkku thanama elutha vendam.acju enbathu marka arinjarhalin sabai.angu Ella amaipinarum irukkurarahal.sltj kulappawathihal.siru mulai udaiyawarhal.puththi illa edilum theliwu illa.konjum nenappu kuda.pj ku Tamil nadu ulama sabai um ethiraha than irukku.Allah haram pannuna ondula shifa illa.2 gathers 2 qurran ayathu therinda ellorum moulavi aha mudiyathu.kattu padungal adi paniungal acju ku.athula than wetri
ReplyDeleteAkkara matuku ikkara pachchayam.engada natula irukurawangala ulmakkaluku kattupadungal kanniyam seluthungal.oor oda ottu oodu,oruwanoda pathu odu ok
Akkaramatu velaginalum intha matuku Islam velangathu
DeleteMakkkku thanama elutha vendam.acju enbathu marka arinjarhalin sabai.angu Ella amaipinarum irukkurarahal.sltj kulappawathihal.siru mulai udaiyawarhal.puththi illa edilum theliwu illa.konjum nenappu kuda.pj ku Tamil nadu ulama sabai um ethiraha than irukku.Allah haram pannuna ondula shifa illa.2 gathers 2 qurran ayathu therinda ellorum moulavi aha mudiyathu.kattu padungal adi paniungal acju ku.athula than wetri
ReplyDeleteAkkara matuku ikkara pachchayam.engada natula irukurawangala ulmakkaluku kattupadungal kanniyam seluthungal.oor oda ottu oodu,oruwanoda pathu odu ok
Allahku rasool enna joakra ungalnatil bithath ulamakalu Katy padanuma ithuaan sltj.kum ungalum ulla vithiyasam
Deleteகட்டுரையாளர் இன்னும் அவரது கருத்துக் களை சரியான முறையில் அறியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ஒரு விடயத்தில் ஆழமாக தெரியாது போனால் மொளனம் காப்பது மேலாகும்
ReplyDeletePathill illaattyumm mownamthaan kaakkanum
ReplyDeleteHaha shahabdeen Jainulabdeen! You blew your cover by commenting on both of your account 😂😂
ReplyDeleteM Jawfer stop putting JP ( Jamatthu Pakkeer ) next to your name. It shows how low ur. No offence. And it's unislamic.
இஸ்லாத்தை பிழையான விதத்தில் அப்பாவி மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் தங்கள் வயித்து பொழப்பை நடத்தி வரும் எவருக்கும் சகோ PJ ன் வரவு ஒரு தலையிடியாகதான் இருக்கும் . இந்த வகையில் இவரின் வருகையை முழுமையாக தடுத்த பெருமை இந்த செத்த பொணத்தை வைத்து வியாபாரம் நடத்தும் இந்த கப்ரு வணங்கிகளையே சாரும்.....
ReplyDeleteWell said keep it up stay calm hold quran and hadis ur d winer
Delete