பாலத்தில் பயணித்த ஆட்டோ, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது - சாரதியை காணவில்லை (படங்கள்)
பண்டாரவளை - ஆபத்கமுவ பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சாரதியுடன் முச்சக்கரவண்டி ஒன்று அடித்துச் சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து, பாலத்திற்கு மேல் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது பாலத்தில் பயணித்துக் கொண்டிந்த முச்சக்கரவண்டி, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சாரதி வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
முச்சக்கரவண்டி மீட்கப்பட்டு பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Post a Comment