'நாற்றமடிக்கும் நல்லாட்சி' - லொத்தர் சபையின் தலைவராக கராஜ் மெக்கானிக்
இலங்கையின் முன்னணி வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றான அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கராஜ் மெக்கானிக் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது உறவினர் என்ற ஒரே தகுதியைக் கொண்டு மேற்குறித்த ரொமேஷ் ஜயவர்த்தன என்பவரை தனது அமைச்சின் கீழ் உள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
இவர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவியினுடைய தங்கையின் கணவராவார். சிறிது காலம் கனடாவில் வசித்திருந்த இந்த நபர், அங்கு கராஜ் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரொமேஷ் ஜயவர்தன இதுவரை தனது பயோடேட்டாவை அபிவிருத்தி லொத்தர் சபையின் மனிதவளப் பிரிவிற்கு கையளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சபையின் தலைவர் பதவிக்கு எந்தவித தகுதியும் இல்லாத காரணத்தினாலேயே அவர் தனது பயோடேட்டாவை கையளிக்கவில்லை என்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
if Arjuna can his appoint his brother as Chairman of SLPC, My3 can appoint his brother as a Chief of Telecom, why Ravi can't do this? This is typical Srilankan way of ruling the county.
ReplyDelete