Header Ads



ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படுத்திய சீ.ஐ.டி.

அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சீ.ஐ.டி. யினர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

27-11-2015 மாலை ஆறுமணியளவில் ஆரம்பித்த இந்த விசாரணை சுமார் இரண்டு மணியத்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. 

அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி என்பவரிடம் இருந்து லஞ்சம் கோரியமை மற்றும் லஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர்களான அர்ஜுண ரணதுங்க, ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக ஆகியோர் கூட்டாக பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இதனையடுத்து குறித்த அமைச்சர்களிடம் முதலில் விசாரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்யுமாறு புலனாய்வுப் பொலிசாருக்கு பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாகவே இன்று மாலை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக இவர்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடமும் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.

அடுத்ததாக அமைச்சர் சம்பிக ரணவகவிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக புலனாய்வுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. This is to fool the Nation.....................................

    ReplyDelete

Powered by Blogger.