Header Ads



கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், மரண வீட்டில் சவமாகவும் இருக்க சிலர் நினைக்கின்றனர் - அமீரலி


( அபூ செய்னப்)

வறுமையை காரணம் காட்டி உங்கள் பிள்ளைகளின் கல்வியை பாழ்படுத்தி விடாதீர்கள் கல்வியின் மூலமே பிள்ளையின் எதிர்காலத்தை பட்டை தீட்ட முடியும் அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுப்பதும் அவர்களின் கல்விக்கான ஆரோக்கியமான பங்களிப்புகளை வழங்குவதும் பெற்றோர்களான உங்களின் பொறுப்புமிக்க கடமையாகும் இந்தவிடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதர அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி வேண்டுகோள் விடுத்தார் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் " செமடசெவன" மாதிரிகிராம வீடமைப்புத் திட்டதிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிராமிய பொருளாதர அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்

இன்றைய சில அரசியல் வாதிகளின் போக்கு மிக்க் கேவலமானதாகவும் நாகரீகமற்றதாகவும் காணப்படுகிறது. கலியாண வீட்டில் தானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் மரண வீட்டில் தானே சவமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் இது அரசியல் முதிர்ச்சி அற்ற செயற்பாடாகும். இவர்கள் மூத்த அரசியல் வாதிகலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் ஒருவர் கொண்டு வந்து சேர்க்கின்ற வளத்தை அவருக்கு தெரியாமால் திறந்து வைத்து புகழ் தேட முற்படுவது அடுத்தவனின் மனைவி மீது ஆசை கொள்வதை போன்ற அருவருக்கதக்க செயற்பாடாகும் இவ்வாறான செயல்பாடுகளை ஒரு நாளும் அங்கிகரிக்க முடியாது ஒரு நேர்மையான அரசியல்வாதியிடம் அரசியலில் நேர்மை இருக்கும் தான் கொண்டு வந்து செர்க்காத வளத்தை தனது பெயரில் திறப்புவிழா நடத்த வேண்டும் என் று விரும்ப மாட்டான் நான் அப்படித்தான் நான் பணம் ஒதுக்கி செய்யப்படாத அபிவிருத்தி பணிகளை நாமே முன்னின்று செய்ய வேண்டும் என்று நினைக்காதவன் எனவே இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளில் இருந்து சம்மந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டும் 

நீங்கள் வாக்குகள் அளித்து அரசியல் வாதிகளை உருவாக்குவது அபிவிவிருதியை கருத்தில் கொண்டே நீங்கள் விரும்பும் அபிவிருத்தி இந்த நல்லாட்சில் நடைபெறும் அதன் முதற் கட்டமாக 25 பயனாளர்களுக்கான இந்த வீட்டுத்திட்டமாகும் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் குடி இருக்க வேண்டும் குறைந்த விலைக்கு இதனை விற்று விட்டு இன்னொரு தடவை வீட்டுக்கு விண்ணப்பிக்க கூடாது இதனை சட்டரீதியான அனுமதியுடன் அரச அங்கிகாரத்துடன் செய்வற்ற்கு இங்குள்ள அதிகாரிகள் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் என்று அவர் கூறினார்.

2 comments:

  1. மற்றவன் பொன்டாட்டியை ஆசைபட கூடாது என்டு ஒரு உதாரணத்துக்கு சொன்னாலும் சில அரசியல்வாதிகள் உண்மயாகவே தூக்கிட்டு போகின்றாக

    ReplyDelete
  2. அரசியல்வாதியானால் அடிக்கல்நாட்டியும் திறப்புவிழாக்கள் செய்தும் அநாகரியபேச்சுக்கலாலும் மக்கள் மனங்கலை வென்ருவிடலாம் எனநினைத்தவர்கள்தான் இப்போவீட்டினுல் முடங்கிகிடக்கின்ரார்கள் இதைபுரிந்தாவது இவ்வாரான அரசியல்வாதிகள் அடக்கிவாசிக்கவேன்டும் மாணவர்கள் ஆசிரியர்களீடமிருந்து இப்போ கற்கவேட்டியதில்லை உங்கலைப்போன்றஅரசியல் வாதிகள்பேசும் பேச்சும் செயலும் போதும். அரசியலில் அல்லாஹ்வை பயந்துநடக்க அறீவுரைகூரும் நீங்கள் நாவால் நரகத்துக்கு செல்லவேன்டும் என்பதை ஏன்மற்ந்து விடுகின்றீர்கள்???????

    ReplyDelete

Powered by Blogger.