Header Ads



"சண்டை பிடிப்பது அவர்களாயினும், தலைகுனிவது சமூகம்தான்..."

-ஐ. எல். எம். றிபாஸ்-

கடந்த வார அரசியல் களநிலவரங்களில் களைகட்டியது கிழக்கு பிரதேச  அரசியல் தலைவர்களின் ரிப்பன் வெட்டும் போட்டியும் அதன் பின்னர் அவர்கள் வழங்கிய பேட்டிகளும்தான்.  உலகெங்கும் முஸ்லிம் சமுகம் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் பெரும் துயரங்களுக்கும் தொடர்ச்சியாக ஆட்பட்டு நொந்து நிற்கிறது. அந்த சமூகத்திற்கெதிரான சதி நடவடிக்கைகள், அந்த சமுகத்தை கருவறுப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரந்துகிடக்கிறது.  இந்த சதிகளின் முஸ்தீபுகளை எமது தேசத்திலும் நாம் கண்டோம், அது இன்னும் ஓய்ந்து விடாத ஒரு சூலில், இலங்கயின் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களிக் கண்டு ஒரு புதிய இயங்கியலுக்கூடாக  தனது பயணத்தை தொடரத் தொடங்கியுள்ளது. 

நல்லாட்சி அரசு பல அரசியல் நகர்வுகளையும் தீர்க்கமான அரசியல் பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில் படிப்படியாக முனைப்புடன் செயற்படுகிறது. பல்வேறுபட்ட ஆணைக் குழுக்கள் உருவாக்கமும் , சட்டவாக்கங்களும் சந்தடியில்லாமல் முன்னகர்கின்றன, நாட்டின் அரசியல் மற்றும்  பொது விடயங்கள் தொடர்பான கொள்கை உருவாக்கங்களும், நில வாரைபுகள் வரையறைகள் தொடர்பிலான தீர்மானகளும் கொண்டுவரப்  படுகின்றன, இவ்வாறு பல அரசியல் நிகழ்வுகள் நடந்தேறும் இந்த காத்திரமான தருணத்தில் பல்வேறுபட்ட அறிஞர்களையும் அனுபவமிக்கவர்களையும் உள்வாங்கி  எமது தேசத்தின் அரசியல் மாற்றத்தில்  மற்றும் கொள்கைவகுப்பு நடவடிக்கைகளில் எதிர்கால முஸ்லிம் சமுக இருப்பையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டு பல அரசியல் முன்னகர்வுகளைச் செய்ய வேண்டியது நமது அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும். இந்த சமுக பொறுப்பை தலையில் சுமப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இவர்களை மக்கள் அரியாசனத்தில் அமர்த்தினார்கள். ஆயினும் இந்த அரசியல் தலைவர்கள் இந்த பெரும் பொறுப்புகளை மறந்துவிட்டு; தெரு முனைகளில் குடுமிச் சண்டை பிடித்துக் கொண்டு சமுகத்தின் தராதரம் பற்றிய கேவலமான எண்ணக் கருவினை ஏனைய சமுகங்களின் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

முஸ்லிம் சமுகம் பல பழிப்புகளையும் அவமானங்களையும் தாங்கி நிற்கிறது, எமது தேசிய உணர்வும் தேசியத்திற்கான பங்களிப்பும் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன, இந்த தேசத்தின் வளங்களை சுரண்டுபவர்களாக, அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு தேச நலனில் தியாகத்துடன் பங்களிப்புச் செய்யாதவர்களாக எம்மை சித்திரிப்பதில் ஏனைய சமூகமும் அவர்களது ஊடகங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில்தான் முஸ்லிம் நபரொருவர் விடுகின்ற சிறிய தவறும் முஸ்லிம்  சமுகத்தின் தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இந்த விடயங்களை மனதில் வைத்துக் கொண்டுதான்  ஒவ்வொரு முஸ்லிமும்  செயற்படவேண்டிய கூட்டு பொறுப்பு எம்மீது சுமத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக சமுகத்தின் முக்கிய புள்ளிகளும் அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றனர். 

இந்த யதார்த்த சூழலுக்கு மாறாக,  சமுகத்தின் மானம் மரியாதை என்பதை தலைமீது வைத்து சுமக்க வேண்டிய, அதன் மதிப்பை  காட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசியல் பதவிகளில் இருக்கின்ற எமது அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் மிக மோசமான முறையில் சமுகத்தை தலைகுனிய செய்துள்ளது, ஒரு கட்டடத்தை பல முறை திறப்பதும், கட்டடங்களை திறக்கவிடாமல் என்னை வீசி அழகழிப்பு செய்வதும், கேவலமான துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடுவதும். தகதி வாய்ந்த தன்மானமுள்ள அரசியல் தலைமைகளுக்கு உகந்ததல்ல. இன்னும் இந்த கீழ்த்தரமான கைங்கரியங்களை தமது அபிமானிகளை வைத்து தூண்டிவிடுவதும் மிக அநாகரிமாக செயற்பட வைப்பதும் இந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பலத்த அவமானமும் ஏமாற்றமுமாகும். முஸ்லிம் உரிமை முஸ்லிம் விடுதலை சமுக இருப்பு என பிரமாண்டமான கோசங்களோடு பிரச்சாரம் செய்து  வெற்றி பெற்ற இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமுக ஒற்றுமை, சமுக நாகரிகம், முன்மாதிரியான அரசியல் கலாச்சாரம் பற்றியும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக முஸ்லிம் சமுகத்தின் முதுகெலும்பாக மிளிர வேண்டிய கல்விக் கூடங்களில், இவ்வாறான அநாகரிக செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதும், மாணவர்களை அடைத்து வைத்து தமது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்  மிகவும் அநாகரிகமான செயற்பாடுகளாகும், மேலும்  மாணவர் சமுகத்திற்கு அடிமைத் துவத்தைக் கற்றுக் கொடுத்து, அரசியல் ஜால்றாகளையும் அடிவருடிகளையும்  கதாநாயகர்களாக கட்டமைப்புச் செய்துகொள்ள வைக்கும் கைங்கரியமுமாகும், இதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு  நாம் எதனைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும், அரசியல் பிரமுகர்களின் கைப்பிள்ளைகளாக ஆசிரியர்களை மாற்றிவிடுவது, அந்த ஆசிரியர்களுக்கான மரியாதையை மானவர்ககளின் மத்தியில் மிகமோசமாக  சிதைத்துவிடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறான அரசியல் தலைமைகளை களமிறக்கும் கட்சித் தலைமைகளும், இவர்களை தொடர்ச்சியாக வாக்களித்து வெல்லவைக்கும் மகாஜனங்களும் இந்த அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் பற்றி தமது தெளிவான அதிருப்தியை பதிவு செய்யவேண்டும், எமது சமுகத்தின் கெளரவம் பற்றியும் மாணவ சமூகத்தினதும் எமது பாடசாலைகளினதும் சுயாதீனம் பற்றியும் கருத்தில் கொண்டு இந்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுகளுக்கு எமது சமுகத்தின் கல்விக் கூடங்கள்  பலியாவதைத் தடுக்க சிந்தித்து செயல்படவேண்டியது நம் அனைவரதும் கடமையும்  கூட்டுப் பொறுப்புமாகும்.

4 comments:

  1. நல்லதொருவிலக்கம் தனிக்காட்டுராஜாக்கள் போன்ருசெயல்படும் அரசியல்வாதிகலுக்கு செருப்படியாக இருக்கின்றது மேலும் ஊர்மக்கலிடம் வாக்குபிச்சைகேட்டு வயிருவழப்பதும் எனது ஊருக்கு நான்மட்டுமே ராஜாவென எனதுஅபிவிருத்திபனிகள் மட்டும்தான் இங்குநடைபெற வேனும் எனும்சுயநல சிந்தனையில் மற்றவவர்கள் வந்தால் கேவலப்படுத்துவதும்தான் இந்த கேவலமான அரசியல்வாதிகலின் போக்கு. மக்கள் வாக்குபிச்சை கொடுக்கவில்லையெனில் வயிற்ருக்கு பிச்ச்சைஎடுக்கும் நிலைதான்வரும் என்பதை மறந்த ஆனவப்பேச்சுக்கள் வேரு ஒரு ஊரின்பிரட்சனைகள் தன்னால்மட்டும் சரிசெய்யமுடியுமேன நினைத்து அடுத்த அரசியல்வாதியை எதையும்செய்யவிடாமல் தடுத்து கடைசியில் தானேசெய்தமாதிரி பில்டாப்கொடுத்துபேசி மக்கலை மடையர்கலாக்கி ஊரின் ஒற்றூமையும் சீர்குழைக்கும் மானம்கெட்ட பொழப்பு நடத்தும் அரசியல்வாதிகலை இனம்கன்டு மக்கள்தான் நல்லபாடம்புகட்டவேன்டும்

    ReplyDelete
  2. அல்லஹ்வுடைய பயம் இருந்தால் இவ்வாறு ஒரு விழாவை இரண்டுதரம் திறந்து வைத்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்ப்படுத்துவார்களா ? கேவலம் இந்த உலகத்தோடு முடிந்து போகும் இந்த பதவிக்காக கொஞ்சம்கூட ஈமான் இல்லாமல் அண்மையில் கிழக்கு மாகாண ஓட்டமாவடியில் நடந்தது எப்போதும் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் அவர்களை பகைவர்கலாக்குவது இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள்தான் இவர்கள்தானா எதிகால தந்ததிகளுக்கு ஆக்கபூர்வமான சேவையை செய்துவிட்டு மரணிக்ககூடியவர்கள்?அந்நிய மதத்தவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள் இதுதானா உங்கள் இஸ்லாமிய ஒற்றுமை என்று.வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால் என்ன வரப்போகிறது பொறாமையின் உச்சகட்டத்தை இருதரப்பும் கையாண்டது என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் நல்லபுத்தி கூறியிருக்கின்றீர்கள் திரு.றிபாஸ்!

    அல்லாஹ்வைப் பயந்து கொள்வதெல்லாம் நம்மைப்போல சாதாரண மக்கள்தான். அதிகாரவெறி பிடித்த கோட்சூட் ஆசாமிகளுக்கு அதெல்லாம் ஏழாம் பட்சம்.

    இவர்களை நம்புவதை விட ஜேவிபியின் அனுரகுமார போன்றவர்களை ஆதரிக்கலாம்.

    ReplyDelete
  4. அரசியல்வாதிகள் அனைவரும் சந்தர்பபவாதிகள்.
    People also stupid. People will forget everything and elect the same idiots again.
    People should cast their vote to the people who protect the dignity of themselves and keeping the promises. Once chance only if they didn't do. The next election they should be sent home.

    ReplyDelete

Powered by Blogger.