முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்
கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்தளை நீதவான் சம்பத் கமகேவினால் இன்று (03) இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
ஆயினும், சுகவீனம் காரணமாக, ஜனக பண்டார இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அவரது வைத்தியரின் அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கஹவத்தையில், ஐ.தே.க. ஆதரவாளர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 3 சந்தேகநபர்களும் இன்று (03) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது பெல்மதுளை நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா, அவர்கள் மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, நிவித்திகலை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதி தலைவர் அஜித் மலன் குணரத்ன ஆகியோரே மற்றைய இரு சந்தேகநபர்களாவர்.
4ஆவது சந்தேகநபரான சரத் சந்திரசிறி பண்டாரவுக்கு, தலா ரூபா 50 ஆயிரம் பெறுமதியான இரு பிணை, ரூபா 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
பிரேமலால் ஜயசேகர கடந்த ஜனவரி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment