முஸ்லிம்களுக்கு இனி அட்டுழியங்கள் நடைபெறாது என, உறுதிப்படுத்தவேண்டிய கடமை எமக்குண்டு - ஹக்கீம்
-எம்.எம்.எம். ரம்ஸீன்-
முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த அரசாங்க காலத்தில் நடைபெற்ற அட்டுழியங்கள் போன்ற அட்டுழியங்கள் இனிமேல் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை எமக்குண்டு என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருhன அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கெலிஓயா கலுகமுவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் 06.11.2015 நடைபெற்ற கலுகமுவ பகுதி முஸ்லிம்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
புதிய அரசாங்கத்தில்; தீமைகள் இடம்பெறவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். என்னை சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் புதிய அரசாங்கத்தில் தீமைகள் இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல நன்மைகளும் இடம்பெறவில்லை என்று கூறினார். நான் மக்கள் மத்தியில் செல்லும் என்னிடம் தூதுவர் கேட்ட கேள்வியைப் போல் மக்களும் கேட்பதுண்டு. ஆனால் எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் பிரதேச அபிவிருத்திகளில் அதிக கவனம் செலுத்தும்.
கண்டி மாவட்ட முஸ்லிம்கள் பெரும் நம்பிக்கையில் கடந்த பொதுத் தேர்தலில் என்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். கலுகமுவ கிராமம் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த கிராமம் மட்டுமன்றி அவர் நேசித்த கிராமங்களுள் ஒன்றாகும். கண்டி மாவட்டத்தில் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய கிராமமாகும். என் மூலம் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் கலுகமுவ பகுதிக்கு போதியளவு வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் இப்பகுதி மக்கள் மத்தியில் உண்டு என்பதை நான் நன்கறிவேன்.
எனவே எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்தியை இக்கிராமத்திற்கு கொண்டு வருவோம் என்றார். .

எல்லாம் நீங்கள் அறிந்து வைத்துக்கொண்டால் போதும் அடுத்த தேர்தல் வரும்வரை இப்படியே காலத்தை கடத்திக்கொண்டு போய் தேர்தல் வந்தவுடன் புதிய புதிய அறிக்கைகளை விட்டு மக்களை மடையனாக்கும் வேலையை செய்ய வேண்டியதுதான்.நீங்களல்லாம் மகா புத்திசாலிகள் மக்கலல்லாம் மகா மடையர்கள்.உங்கள் பார்வையில்.ஆனால் அல்லாவின் பார்வையில் நீங்கள் எல்லாம் முபிலிசுகள் நஷ்டவாளிகள் மக்கள் வெற்றியாளர்கள்.ராஜித ஒருநாள் சொன்னார் அமைச்சர் பதவிக்காக மதம் மாறினாலும் மாறுவீர்கள் என்று அதையல்லாம் கொஞ்சம் தனிமையில் இருந்து யோசித்து பாருங்கள் நாம் எங்கு இருக்கிறோம் என்று. விரால் இல்லாத மடுவுக்கு தத்துக்குரத்தை தலைமை வேலை பார்க்கிரயாம் அதுபோன்றுதான் இந்த முஸ்லிம் தேசிய தலைவர்களின் பதவி மோகம்.
ReplyDeleteHa.Ha.100% u r correct.
DeleteIf u r near by me I give u v.good sweet s in ur mouth .100% absulootly correct.
DeletePora pokil vaanilai sasthram ivaray soluvar pola
ReplyDelete