நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை - பொருட்களின் விலைகள் குறையுமா..?
நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாளை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் புரிந்துணர்வின் அடிப்படையில் அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது.
இதற்கு முன்னதாக நாளை காலை ஒன்பது மணியளவில் ஜனாதிபதி தலைமையிலான விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் வரவு செலவுத்திட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து நாளை பிற்பகல் இரண்டு மணியளவில் வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் நாளை பிற்பகல் நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2
நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நல்லாட்சி அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்படும்.
அத்துடன் இந்த வரவு செலவுத்திட்டம் அடித்தட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், பொதுமக்களின் பொருளாதார ஆற்றலை பாதுகாக்கும் வகையிலும் அமையப் பெற்றிருக்கும்.
குறிப்பாக பொதுமக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய வரவு செலவுத்திட்டம் மூலமாக பத்து அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Post a Comment