இந்தக் கொடுமையை, தடுத்து நிறுத்துங்கள்..!
திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகின்றன.
வாட்ஸ்அப்பில் முத்தலாக் சொல்வது கொடுமை எனில் அதை ஏற்றுக்கொண்டு தம்பதியினரைப் பிரித்து வைப்பது அதைவிடக் கொடுமை.
“ஒரே மூச்சில் மூன்று தலாக்” என்பது இஸ்லாத்தில் இல்லாத நடைமுறை, அதை மார்க்க அறிஞர்கள் அனுமதிக்கக் கூடாது என்று அந்தக் கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன்.
மூன்று வார்த்தைகளைச் சொல்லிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துவிடலாம் என்று சட்டம் அருளுவதற்கு இறைவன் ஒன்றும் முட்டாள் அல்ல.
இறைத்தூதர் கொடுமையானவரும் அல்லர். இல்லற வாழ்க்கை என்பது எப்போதும் தென்றல் தவழும்
நந்தவனம் அல்ல. கணவன்- மனைவிக்கு இடையே சிக்கல்கள், பிரச்னைகள் வரத்தான் செய்யும். அவற்றைத் தீர்ப்பதற்கான அழகான வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் தந்துள்ளார்கள்.
“அவற்றில் எந்த ஒன்றையுமே கடைப்பிடிக்க மாட்டோம்,
மனம் விரும்புவதுபோல் தலாக் சொல்வோம்;
மார்க்க அறிஞர்களும் அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” எனில் இவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் விளையாடுகிறார்கள் என்று பொருள்.
முத்தலாக்கை எதிர்த்து எதையாவது எழுதினால் “உனக்கு அரபி மொழி தெரியாது, நீ மதரசாவில் படிக்கவில்லை” என்று சிலர் பூச்சாண்டி காட்டி என் மீது பாய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. ஒரே மூச்சில் முத்தலாக் எனும் கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருப்பேன்.
- சிராஜுல்ஹஸன்.

வட்ஸப்பில் தலாக் சரிவராது, இரண்டு சாட்சிகள் வைத்து நேரில்தான் தலாக் சொல்லப்பட வேண்டும்.
ReplyDeleteIs it ?
ReplyDeleteMahendran...What's your problem ltte.b-----d.
ReplyDeleteஇரண்டு சாட்சி வேண்டும் என்றால் வட்ஸப் குறுப்பில் வைத்து சொன்னால் சரி தானே
ReplyDeleteHaji Mohammed
ReplyDeleteIf you not knowing correctly please learn prior to write something. From where you got that 2 witness for Thalaq. Quran very clearly says about Thalaq it has full chapter why you don't read abd understand according to our salaf (companion of Prophet) check the people of knowledge. For Thalaq certain period and conditions are there. Please study and spread to our non Muslims so they may understand Islam better rather than using harsh words to them
First of all I agree and support the argument of Mr Sirajulhasan. secondly, we should be good examples so that non Muslims get attracted and learn the principles and concepts of Islam. Islam was preached in that manner. Shafraz Khan, My opinion is that you have written inappropriate language. You should always be patient and shower love. Even if the questions seem to be inappropriate, you should always think from the questioner's point of view.
ReplyDeletedear muslim brothers (who do not know basic knowledge of islamic law on divorce),
ReplyDeleteplease do not judge wrongly of islamic law on divorce. because Allah is the only truly capable always fairly and honestly becasue he only created the man & woman (human being) and other creatures and he only the the truth of his judgement, but it is also very clear for everyone to understand that it is FAIR & HONEST.
so, please let some of our viewers who can bring here the true judgement or law of divorce according to Islam, and be patient or please you also try to learn from Quran, hathees (with the help of scholors, in case you cannot undertsand). UNTIL... PLEASE DO NOT CRITICIZE THE ISLAM BLINDLY..like other non-muslims who have to interest to learn islam, but try to criticize with fake stories and wrong information or goosibs.
dear non-muslim friends, please let our right muslim brothers bring you the true islamic law on this "Divorce" issue with evidence.
insha allah let me also try maximum to bring the truth here very soon.