Header Ads



கோடீஸ்வரர்களை உருவாக்குவதே, அரசாங்கத்தின் இலக்கு - ரவி

இந்த வரவு செலவுத் திட்டம் ஒருசில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மாறாக, மில்லியன் கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தை நேற்று சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 

வானவில் போன்று பிரகாசிக்கக் கூடிய பொருளாதாரச் சேமிப்புள்ள அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதே எமது கனவாகும்.

எமது தேசம் நற்குணத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான ஒரு நாடாக மிளர வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினர் அர்ப்பணிப்புக்களின் விளைவுகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நாம் பொருளாதாரச் சுதந்திரமொன்றினை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

மேலும் நடுத்தர வருமானப் பொருளா தாரமொன்றினை நோக்கி மாற்றமடைவதற்கான குறிக்கோள்களுடன் குறுகிய, நடுத்தர, மற்றும் நீண்ட கால உபாயங்களை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திச் சவால்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட இலக்குகளையும். குறிக்கோள்களையும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம் தளத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. மில்லியன் கோடீஸ்வரர்களை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

1 comment:

  1. by reducing prices of certain commodities, he will make all millionaires.....................

    ReplyDelete

Powered by Blogger.