Header Ads



மைத்திரி தலைமைத்துவத்தை வழங்குவார், விலகிச் செல்வதில்லை என மகிந்த தீர்மானித்துள்ளார்...!

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஒன்றாக செயற்படுவதால், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி பெறும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்டி மேல்நாட்டு கலை சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மாத்திரமல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செயற்படுவதால், சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெறும்.

எந்த வகையிலும் கட்சியில் இருந்து விலகிச் செல்லவதில்லை எனவும் கட்சிக்கு எதிராகவும் செயற்படுவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற தலைமைத்துவத்தை வழங்குவார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்து கொண்டு செயற்பாட்டு ரீதியான முக்கியமான பணிகளை செய்து வருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்காத மேலும் 8 அரசியல் கட்சிகளை கூட்டணியில் இணைந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் அந்த கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தலைமை தாங்குவதாலும் பிரதமர் ரணி்ல் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்குவதாலும் தேசிய அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை பிரகடனத்திலும் தனித்து போட்டியிட்டாலும் இணைந்து ஆட்சி செய்வது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நட்பு ரீதியாக கொள்கையானது ஜனநாயகத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.